Advertisment

மல்டி கமாடிட்டி டூ இந்திய பங்குச் சந்தை.. காளை ஆட்டம்

பேங்க் நிஃப்டி 465.50 புள்ளிகள் அல்லது 1.19% உயர்ந்து 39,598.10 ஆக காணப்பட்டது.

author-image
WebDesk
New Update
Today Nifty and Sensex 10 April 2023

பங்குச் சந்தை இன்றைய நிலவரம் 10 ஏப்ரல் 2023

இந்தியப் பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தை லாபத்தில் நிறைவு செய்தன.

Advertisment

தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50, 114.45 புள்ளிகள் அல்லது 0.67% உயர்ந்து 17,100.05 ஆக காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 355.06 புள்ளிகள் அல்லது 0.62% உயர்ந்து 57,989.90 ஆக இருந்தது.

துறைசார் குறியீடுகளில், பேங்க் நிஃப்டி 465.50 புள்ளிகள் அல்லது 1.19% உயர்ந்து 39,598.10 ஆக காணப்பட்டது. தொடர்ந்து, நிஃப்டி ஐடி 1.18% உயர்ந்து, நிஃப்டி ஆட்டோ 0.48% சரிந்தது. எனினும், நிஃப்டி பொதுத்துறை வங்கி 0.83%, நிஃப்டி மெட்டல் 223% உயர்ந்தது.

ஆசிய சந்தைகள்

ஆசிய சந்தைகள் வெள்ளிக்கிழமை அமர்வை பரந்த அளவில் லாபத்தில் முடித்தன. ஹாங்காங்கின் ஹாங் செங் 1.64%, தென் கொரியாவின் KOSPI 0.75%, ஜப்பானின் Nikkei 225 1.20% மற்றும் சீனாவின் ஷாங்காய் கூட்டு குறியீடு 0.73% உயர்ந்தன.

கச்சா எண்ணெய்

ஏப்ரல் டெலிவரிக்கான WTI கச்சா 1.38% அதிகரித்து $69.29 ஆக இருந்தது, மே டெலிவரிக்கான ப்ரெண்ட் க்ரூட் 1.27% உயர்ந்து $75.65க்கு பிற்பகல் 3:30 மணிக்கு (IST) வர்த்தகம் செய்யப்பட்டது.

இந்திய ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.31% அதிகரித்து 82.38 ஆக இருந்தது.

தங்கம் வெள்ளி

ஏப்ரல் டெலிவரிக்கான தங்கம் 251 புள்ளிகள் அல்லது 0.43% மதியம் 3:30 மணிக்கு (IST) ரூ. 58,257 ஆக இருந்தது.
மே டெலிவரிக்கான மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் வெள்ளி 558 புள்ளிகள் அல்லது 0.84% அதிகரித்து ரூ.67,089 ஆக இருந்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Gold Stock Market Nse Sensex Bombay Stock Exchange Crude Oil Prices
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment