இந்திய பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் திங்கள்கிழமை (மார்ச் 06) வர்த்தக அமர்வை உயர்வுடன் நிறைவு செய்தன.
மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 60,200க்கு மேலேயும், தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃப்டி 50 17700க்கு மேலேயும் முடிவடைந்தது.
இந்திய பங்குச் சந்தை நிலவரம்
பேங்க் நிஃப்டி 41350க்கு மேல் முடிவடைந்தது. நிஃப்டி 50-ல் அதானி எண்டர்பிரைசஸ் (5.45%), டாடா மோட்டார்ஸ் (2.92%), ஓஎன்ஜிசி (2.56%), என்டிபிசி (2.35% வரை) மற்றும் பவர் கிரிட் (2.32% உயர்வு) அதிக லாபம் பெற்றன.
மறுபுறம், பிரிட்டானியா (1.97% சரிவு), டாடா ஸ்டீல் (1.07% சரிவு), JSW ஸ்டீல் (1.04% சரிவு), ஹிண்டால்கோ (0.58% சரிவு) மற்றும் லார்சன் & டூப்ரோ (0.56% சரிவு) ஆகியவை நஷ்டமடைந்தன.
இந்திய பங்குச் சந்தை
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 117.10 புள்ளிகள் அல்லது 0.67% உயர்ந்து 17,711.45 ஆகவும், தேசிய பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 415.49 புள்ளிகள் அல்லது 0.69% உயர்ந்து 60,224.46 ஆகவும் காணப்பட்டது.
துறைசார் குறியீடுகளில், வங்கி நிஃப்டி 0.24% உயர்ந்தது. நிஃப்டி ஆட்டோ 0.96% உயர்ந்தது, நிஃப்டி ஐடி 1.22% உயர்ந்தது, நிஃப்டி பொதுத்துறை வங்கி 0.23% சரிந்தது, நிஃப்டி ரியால்டி 0.52% சரிந்தது.
ஆசிய சந்தைகள்
ஆசிய சந்தைகள் திங்கட்கிழமை அமர்வை பெரும்பாலும் பச்சை நிறத்தில் முடித்தன.
ஜப்பானின் நிக்கேய் 225 1.11% உயர்ந்தது, ஹாங்காங்கின் ஹாங் செங் 0.17% மற்றும் தென் கொரியாவின் KOSPI 1.26% உயர்ந்தது.
சீனாவின் ஷாங்காய் கூட்டு குறியீடு 0.19% சரிந்தது.
இந்திய பண மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மாலை 3:05 மணிக்கு (IST) 0.18% அதிகரித்து 81.81 ஆக இருந்தது.
தங்கம், வெள்ளி நிலவரம்
ஏப்ரல் டெலிவரிக்கான மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் தங்கம் 134 புள்ளிகள் அல்லது 0.24% அதிகரித்து ரூ.55,855.00க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.
மே டெலிவரிக்கான வெள்ளி 202 புள்ளிகள் அல்லது 0.31% அதிகரித்து மதியம் 3:10 மணிக்கு (IST) ரூ.64,603.00 ஆக இருந்தது.
கச்சா எண்ணெய்
ஏப்ரல் டெலிவரிக்கான WTI கச்சா 0.48% குறைந்து $79.30 ஆக இருந்தது. அதே சமயம் ஏப்ரல் டெலிவரிக்கான ப்ரெண்ட் க்ரூட் ஃப்யூச்சர்ஸ் 0.70% குறைந்து $85.23 இல் வர்த்தகம் செய்யப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.