இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் செவ்வாய் கிழமை அமர்வை பச்சை நிறத்தில் முடித்தன. சென்செக்ஸ் 61,000க்கு மேலேயும், நிஃப்டி 17,900க்கு மேலேயும் முடிவடைந்தது.
தேசிய பங்குச் சந்தையில் (நிஃப்டி 50) யுபிஎல் (3.61%), ஐடிசி (3.14%), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (2.44%), அதானி எண்டர்பிரைசஸ் (1.88% வரை) மற்றும் அதானி போர்ட்ஸ் (1.86% வரை) அதிக லாபம் ஈட்டின.
அப்போலோ மருத்துவமனை (2.45% சரிவு), ஐச்சர் மோட்டார்ஸ் (2.23% சரிவு), எஸ்பிஐ லைஃப் (1.54% சரிவு), பிபிசிஎல் (1.16% சரிவு) மற்றும் கிராசிம் (1.15% சரிவு) ஆகியவை நஷ்டமடைந்தன.
மும்பை பங்குச் சந்தையை (பிஎஸ்இ) பொறுத்தமட்டில் சென்செக்ஸ் 600.42 புள்ளிகள் அல்லது 0.99% உயர்ந்து 61,032.26 ஆகவும், தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃப்டி 158.95 புள்ளிகள் அல்லது 0.89% உயர்ந்து 17,929.85 ஆகவும் இருந்தது.
வங்கி நிஃப்டி 0.89 சதவீதம் உயர்ந்தது. ஐ.டி. பங்குகள் 0.99% உயர்ந்தன. தொடர்ந்து, நிஃப்டி எஃப்எம்சிஜி 1.03 சதவீதமும், PSU வங்கி 1.04 சதவீதமும் உயர்ந்தது. எனினும், நிஃப்டி ரியாலிட்டி 1.84% சரிந்தது.
இந்திய ரூபாய் மதிப்பு
மாலை 4:05 மணிக்கு (IST) அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.05% குறைந்து 82.76 ஆக இருந்தது.
கச்சா எண்ணெய்
மார்ச் டெலிவரிக்கான WTI கச்சா 1.43% குறைந்து $78.99 ஆக இருந்தது, அதே சமயம் மார்ச் டெலிவரிக்கான ப்ரெண்ட் க்ரூட் ஃபியூச்சர்ஸ் 1.09% குறைந்து $85.63க்கு மாலை 4:08 மணிக்கு (IST) வர்த்தகம் செய்யப்பட்டது.
தங்கம், வெள்ளி
ஏப்ரல் டெலிவரிக்கான மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் தங்கம் 322 புள்ளிகள் அல்லது 0.57% உயர்ந்து ரூ. 56,819.00 ஆகவும், மார்ச் டெலிவரிக்கான வெள்ளி 8 புள்ளிகள் அல்லது 0.01% குறைந்து மாலை 4:00 மணிக்கு (IST) ரூ. 66,136.00 ஆகவும் இருந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/