Advertisment

சர்வதேச அளவில் உயரும் தங்கம், வெள்ளி.. இன்றைய சந்தை நிலவரம்

சென்செக்ஸ், நிஃப்டி செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தை லாபத்தில் நிறைவு செய்தன. துறைசார் குறியீடுகளில், பேங்க் நிஃப்டி 0.89%, நிஃப்டி ஐடி 0.99%, நிஃப்டி எஃப்எம்சிஜி 1.03%, நிஃப்டி பிஎஸ்யு வங்கி 1.04%, உயர்ந்தன.

author-image
WebDesk
New Update
Today Nifty and Sensex 10 April 2023

பங்குச் சந்தை இன்றைய நிலவரம் 10 ஏப்ரல் 2023

இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் செவ்வாய் கிழமை அமர்வை பச்சை நிறத்தில் முடித்தன. சென்செக்ஸ் 61,000க்கு மேலேயும், நிஃப்டி 17,900க்கு மேலேயும் முடிவடைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் (நிஃப்டி 50) யுபிஎல் (3.61%), ஐடிசி (3.14%), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (2.44%), அதானி எண்டர்பிரைசஸ் (1.88% வரை) மற்றும் அதானி போர்ட்ஸ் (1.86% வரை) அதிக லாபம் ஈட்டின.

Advertisment

அப்போலோ மருத்துவமனை (2.45% சரிவு), ஐச்சர் மோட்டார்ஸ் (2.23% சரிவு), எஸ்பிஐ லைஃப் (1.54% சரிவு), பிபிசிஎல் (1.16% சரிவு) மற்றும் கிராசிம் (1.15% சரிவு) ஆகியவை நஷ்டமடைந்தன.

மும்பை பங்குச் சந்தையை (பிஎஸ்இ) பொறுத்தமட்டில் சென்செக்ஸ் 600.42 புள்ளிகள் அல்லது 0.99% உயர்ந்து 61,032.26 ஆகவும், தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃப்டி 158.95 புள்ளிகள் அல்லது 0.89% உயர்ந்து 17,929.85 ஆகவும் இருந்தது.

வங்கி நிஃப்டி 0.89 சதவீதம் உயர்ந்தது. ஐ.டி. பங்குகள் 0.99% உயர்ந்தன. தொடர்ந்து, நிஃப்டி எஃப்எம்சிஜி 1.03 சதவீதமும், PSU வங்கி 1.04 சதவீதமும் உயர்ந்தது. எனினும், நிஃப்டி ரியாலிட்டி 1.84% சரிந்தது.

இந்திய ரூபாய் மதிப்பு

மாலை 4:05 மணிக்கு (IST) அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.05% குறைந்து 82.76 ஆக இருந்தது.

கச்சா எண்ணெய்

மார்ச் டெலிவரிக்கான WTI கச்சா 1.43% குறைந்து $78.99 ஆக இருந்தது, அதே சமயம் மார்ச் டெலிவரிக்கான ப்ரெண்ட் க்ரூட் ஃபியூச்சர்ஸ் 1.09% குறைந்து $85.63க்கு மாலை 4:08 மணிக்கு (IST) வர்த்தகம் செய்யப்பட்டது.

தங்கம், வெள்ளி

ஏப்ரல் டெலிவரிக்கான மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் தங்கம் 322 புள்ளிகள் அல்லது 0.57% உயர்ந்து ரூ. 56,819.00 ஆகவும், மார்ச் டெலிவரிக்கான வெள்ளி 8 புள்ளிகள் அல்லது 0.01% குறைந்து மாலை 4:00 மணிக்கு (IST) ரூ. 66,136.00 ஆகவும் இருந்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Nifty Sensex Bombay Stock Exchange Crude Oil Prices Cryptocurrency
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment