Advertisment

சென்செக்ஸ், நிஃப்டி சரிவு.. தங்கம், வெள்ளி உயர்வு

திங்கள்கிழமை வர்த்தகத்தை இந்திய பங்குச் சந்தைகள் நஷ்டத்தில் நிறைவு செய்தன.

author-image
WebDesk
New Update
Nifty settles below 19350 Sensex tanks 500 pts

பங்குச் சந்தை இன்றைய நிலவரம் 07 ஜூலை 2023

வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தை இந்தியப் பங்குச் சந்தைகள் நஷ்டத்தில் நிறைவு செய்தன.

தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 50 111.65 புள்ளிகள் அல்லது 0.65% சரிந்து 16,988.40 ஆக காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 360.95 புள்ளிகள் அல்லது 0.62% குறைந்து 57,628.95 ஆக இருந்தது.

Advertisment

துறைசார் குறியீடுகளில், பேங்க் நிஃப்டி 236.15 புள்ளிகள் அல்லது 0.60% சரிந்து 39,361.95 ஆக காணப்பட்டது.

தொடர்ந்து, நிஃப்டி ஐடி 1.43%, நிஃப்டி ஆட்டோ 0.93%, நிஃப்டி PSU வங்கி 0.74%, நிஃப்டி மெட்டல் 2.35% சரிந்தது.

ஆசிய சந்தைகள்

ஆசிய சந்தைகள் திங்கள்கிழமை அமர்வை நஷ்டத்தில் முடித்தன. ஹாங்காங்கின் ஹாங் செங் 2.65%, தென் கொரியாவின் KOSPI 0.69%, ஜப்பானின் Nikkei 225 1.42% மற்றும் சீனாவின் ஷாங்காய் கூட்டு குறியீடு 0.48% சரிந்தன.

இந்திய ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மாலை 3:30 மணிக்கு (IST) 0.11% குறைந்து 82.63 ஆக இருந்தது.

தங்கம், வெள்ளி

ஏப்ரல் டெலிவரிக்கான தங்கம் 396 புள்ளிகள் அல்லது 0.67% உயர்ந்து 3:30 PM (IST) மணிக்கு ரூ. 59,779 ஆக இருந்தது. மே டெலிவரிக்கான மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் வெள்ளி 540 புள்ளிகள் அல்லது 0.79% உயர்ந்து ரூ.69,041 ஆக இருந்தது.

கச்சா எண்ணெய்

ஏப்ரல் டெலிவரிக்கான WTI கச்சா 3.12% குறைந்து $64.63 ஆக இருந்தது, மே டெலிவரிக்கான ப்ரெண்ட் க்ரூட் 3.04% குறைந்து $70.75 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Gold Rate Nifty Sensex Bombay Stock Exchange Crude Oil Prices
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment