இந்திய பங்குச் சந்தை உள்நாட்டு அ மர்வுகள் புதன்கிழமை (மார்ச் 15) வர்த்தகத்தை சிவப்பு நிறத்தில் நஷ்டத்தில் நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை (என்.எஸ்.இ) நிஃப்டி 50 17000க்கு கீழே நிலைபெற்றது. வங்கி பங்குகள் பேங்க் நிஃப்டி 39100க்கு கீழே முடிவடைந்தது.
தேசிய பங்குச் சந்தையில் அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா ஸ்டீல் அதிக லாபம் ஈட்டின.
பார்தி ஏர்டெல், இண்டஸ்இண்ட் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா பங்குகள் வீழ்ச்சியுற்றன.
இந்திய சந்தை நிலவரம்
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 71.15 புள்ளிகள் அல்லது 0.42% சரிந்து 16,972.15 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 344.29 புள்ளிகள் அல்லது 0.59% குறைந்து 57,555.90 ஆகவும் காணப்பட்டது.
துறைசார் குறியீடுகளில், பேங்க் நிஃப்டி 359.90 புள்ளிகள் அல்லது 0.91% சரிந்து 39,051.50 ஆக காணப்பட்டது. தொடர்ந்து, நிஃப்டி ஐடி 0.24%, நிஃப்டி ஆட்டோ 0.51%, நிஃப்டி பிஎஸ்யு வங்கி 1.21%, மற்றும் நிஃப்டி எஃப்எம்சிஜி 0.56% சரிந்தது.
இந்திய ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மாலை 3:55 மணிக்கு (IST) 0.14% குறைந்து 82.6 ஆக இருந்தது.
கச்சா எண்ணெய்
ஏப்ரல் டெலிவரிக்கான WTI கச்சா 0.25% அதிகரித்து $71.51 ஆக இருந்தது. அதே சமயம் ஏப்ரல் டெலிவரிக்கான ப்ரெண்ட் க்ரூட் ஃப்யூச்சர்ஸ் 0.17% உயர்ந்து $77.58க்கு மாலை 3:55 மணிக்கு (IST) வர்த்தகம் செய்யப்பட்டது.
தங்கம், வெள்ளி
ஏப்ரல் டெலிவரிக்கான தங்கம் 158 புள்ளிகள் அல்லது 0.27% உயர்ந்து 3:55 PM (IST) மணிக்கு ரூ.57,641 ஆக இருந்தது. மே டெலிவரிக்கான மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் வெள்ளி 76 புள்ளிகள் அல்லது 0.11% அதிகரித்து ரூ.67,032 ஆக இருந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/