இந்திய பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வியாழக்கிழமை அமர்வில் ஏற்ற இறக்கமாக வர்த்தகமாகி அமர்வை நஷ்டத்தில் முடித்தன.
முன்னதாக, ஆரம்ப வர்த்தகத்தில் உள்நாட்டு குறியீடுகள் உயர்ந்து பச்சை மற்றும் சிவப்பு நிறங்களுக்கு இடையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டன,
ஆனால் வர்த்தகத்தின் கடைசி மணிநேரத்தில் சரிவை சந்தித்தன. மும்பை பங்குச் சந்தை (பி.எஸ்.இ) சென்செக்ஸ் 57,950க்கு கீழேயும், தேசிய பங்குச் சந்தை (என்.எஸ்.இ.) நிஃப்டி 50 17100க்கு கீழேயும், பேங்க் நிஃப்டி 39,650க்கு கீழேயும் முடிவடைந்தது.
நிஃப்டி உயர்வு, சரிவு
நிஃப்டி 50 இல் ஹிண்டால்கோ, மாருதி, நெஸ்லே இந்தியா, ஓஎன்ஜிசி மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டின.
மறுபுறம், எஸ்பிஐஎன், பஜாஜ் ஆட்டோ, கோடக் வங்கி, எச்சிஎல் டெக் மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகியவை நஷ்டமடைந்தன.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.48% அதிகரித்து 82.26 ஆக இருந்தது.
தங்கம், வெள்ளி
ஏப்ரல் டெலிவரிக்கான மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் தங்கம் 537 புள்ளிகள் அல்லது 0.91% உயர்ந்து ரூ. 59,293 ஆக காணப்பட்டது.
தொடர்ந்து, மே டெலிவரிக்கான வெள்ளி 371 புள்ளிகள் அல்லது 0.54% உயர்ந்து ரூ. 69,680 ஆக இருந்தது.
ஆசிய சந்தைகள்
ஆசிய சந்தைகள் வியாழக்கிழமை அமர்வை பெரும்பாலும் லாபத்தில் நிறைவு செய்தன.
ஹாங்காங்கின் ஹாங் செங் 2.34% உயர்ந்தது. தென் கொரியாவின் KOSPI 0.31% முன்னேறியது.
சீனாவின் ஷாங்காய் கூட்டு குறியீடு 0.64% உயர்ந்தது, ஜப்பானின் நிக்கேய் 225 0.17% சரிந்தது.
கச்சா எண்ணெய்
ஏப்ரல் டெலிவரிக்கான WTI கச்சா 0.96% குறைந்து $70.22 ஆக இருந்தது. மே டெலிவரிக்கான ப்ரெண்ட் கச்சா 0.83% குறைந்து $76.05 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/