இந்தியப் பங்குச் சந்தையில், உள்நாட்டு குறியீடுகள் லாபத்தில் புதன்கிழமை அமர்வை முடித்தன. தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50, 44.40 புள்ளிகள் அல்லது 0.26% உயர்ந்து 17,151.90 ஆக வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேபோல், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 139.91 புள்ளிகள் அல்லது 0.24% உயர்ந்து 58,214.59 ஆக இருந்தது. வங்கி நிஃப்டி 104.35 புள்ளிகள் அல்லது 0.26% உயர்ந்து 39,999.05 ஆக இருந்தது.
நிஃப்டி லாபம், நஷ்டம்
தேசிய பங்குச் சந்தை நிஃப்டி-50 இல் ஹெச்.டி.எஃப்.சி லைஃப், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், சன் பார்மா மற்றும் டாடா கன்ஸ்யூமர் ஆகியவை அதிக லாபம் ஈட்டின.
மறுபுறம், பிபிசிஎல், என்டிபிசி, கோல் இந்தியா, அதானி போர்ட்ஸ் மற்றும் அதானி எண்டர்பிரைசஸ் ஆகியவை நஷ்டமடைந்தன.
வங்கி நிஃப்டி நிலவரம்
வங்கி நிஃப்டி 104.35 புள்ளிகள் அல்லது 0.26% உயர்ந்து 39,999.05 ஆக இருந்தது. காலை வர்த்தகத்தில் வங்கி நிஃப்டி 121.60 புள்ளிகள் அல்லது 0.30% உயர்ந்து 40,016.30 ஆக காணப்பட்டது.
கச்சா எண்ணெய்
புதன்கிழமை ஆரம்ப ஆசிய வர்த்தகத்தில் எண்ணெய் வீழ்ச்சியடைந்தது. இந்த வாரம் 3%க்கும் அதிகமாக உயர்ந்துள்ள ப்ரெண்ட் ஃப்யூச்சர்ஸ், 48 சென்ட்கள் அல்லது 0.6% குறைந்து ஒரு பீப்பாய் $74.84 ஆக காணப்பட்டது.
ஆசிய சந்தைகள்
ஆசிய சந்தைகள் லாபத்தில் வர்த்தகமாகின. அதன்படி, சீனாவின் ஷாங்காய் கூட்டு குறியீடு 0.53%, ஹாங்காங்கின் ஹாங் செங் 2.26%, தென் கொரியாவின் KOSPI 1.09% மற்றும் ஜப்பானின் நிக்கேய் 225 1.93% உயர்ந்தன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/