இந்திய பங்குச் சந்தைகள் எட்டு தொடர்ச்சியான அமர்வுகள் வீழ்ச்சிக்கு பின்னர், இன்று சரிவை மாற்றின.
மார்ச் மாத முதல் அமர்வை பசுமையாக முடித்தன. தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 146.95 புள்ளிகள் அல்லது 0.85% உயர்ந்து 17,450.90 ஆக வணிகத்தை நிறைவு செய்தது.
அதேபோல், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 448.96 புள்ளிகள் அல்லது 0.76% உயர்ந்து 59,411.08 ஆக காணப்பட்டது.
நிஃப்டி 50 இல் அதானி எண்டர்பிரைசஸ், ஹிண்டால்கோ, யுபிஎல், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி ஆகியவை அதிக லாபம் ஈட்டின.
வங்கி நிஃப்டி
பிரிட்டானியா, பவர் கிரிட், சிப்லா, பிபிசிஎல் மற்றும் எச்டிஎஃப்சி வங்கி ஆகியவை நஷ்டமடைந்தன.
வங்கி நிஃப்டி 429.10 புள்ளிகள் அல்லது 1.07% உயர்ந்து 40,698.15 இல் நிறைவடைந்தது.
பெடரல் பேங்க், பிஎன்பி, பேங்க் ஆஃப் பரோடா, ஏயூ பேங்க் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை அதிக லாபம் ஈட்டின. அதே சமயம் ஹெச்டிஎஃப்சி வங்கி மட்டுமே பின்தங்கியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/