Share Market News Today : இந்தியப் பங்குச் சந்தைகள் புதன்கிழமை வர்த்தகத்தை லாபத்தில் நிறைவு செய்தன. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 235.05 (0.39%) உயர்ந்து 60,392.77 ஆக காணப்பட்டது.
தேசிய பங்குச் சந்தை என்.எஸ்.இ. நிஃப்டி 0.51 சதவீதம் உயர்ந்து 17,812.40 ஆக காணப்பட்டது. வங்கி பங்குகள் 191.45 புள்ளிகள் அதிகரித்து 41,557.95 ஆக காணப்பட்டன.
நிஃப்டி 50 இல் டிவிஸ் லேப், பஜாஜ் ஆட்டோ, அதானி எண்டர்பிரைசஸ், ஐஷர் மோட்டார்ஸ் மற்றும் டாக்டர் ரெட்டி ஆகியவை அதிக லாபம் ஈட்டியுள்ளன.
மறுபுறம், பவர் கிரிட், என்.டி.பி.சி, நெஸ்லே இந்தியா, அல்ட்ராடெக் சிமெண்ட் மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் ஆகியவை அதிக நஷ்டமடைந்தன.
டி.சி.எஸ் பங்குகள் (TCS shares)
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் பங்குகள் Q4 முடிவுகள் அறிவிப்புக்கு முன்னதாக புதன்கிழமை 1.5% உயர்ந்தன. டிசிஎஸ் பங்கு இன்ட்ராடே அதிகபட்சமாக ரூ.3,260.95ஐ தொட்டு, ரூ.3,245.50-ல் முடிந்தது.
அதேபோல் தொடக்க வர்த்தகத்தில் அதானி பங்குகள் 2 சதவீதமும், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி பங்குகள் 1 சதவீதமும் உயர்வை கண்டன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“