இந்தியப் பங்குச் சந்தை உள்நாட்டு குறியீடுகள் வெள்ளிக்கிழமை (ஏப்.28) அமர்வை லாபத்தில் முடித்தன. தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 149.95 புள்ளிகள் அல்லது 0.84% உயர்ந்து 18,065 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 463.06 புள்ளிகள் அல்லது 0.76% உயர்ந்து 61,112.44 ஆகவும் காணப்பட்டது.
துறைசார் குறியீடுகளில், பேங்க் நிஃப்டி 233.05 புள்ளிகள் அல்லது 0.54% உயர்ந்து 43,233.9 ஆகவும், நிஃப்டி ஐடி 352.95 புள்ளிகள் அல்லது 1.29% முன்னேறி 27,708.2 ஆகவும் இருந்தது.
தேசிய பங்குச் சந்தையில், அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், நெஸ்லே இந்தியா, விப்ரோ மற்றும் பிரிட்டானியா ஆகியவை அதிக லாபம் ஈட்டின,
ஆக்சிஸ் வங்கி, டைட்டன், ஓஎன்ஜிசி, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் மற்றும் சிப்லா ஆகியவை நஷ்டமடைந்தன.
பொதுத்துறை வங்கி பங்குகள்
நிஃப்டி பொதுத்துறை வங்கி 72.95 புள்ளிகள் அல்லது 1.79% உயர்ந்து 4,140.95 ஆக இருந்தது. பஞ்சாப் சிந்த் வங்கி (PSB), யூகோ வங்கி, மத்திய வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி அதிக லாபம் ஈட்டின. அதாவது பொதுத்துறை வங்கி பங்குகள் 2 சதவீதம் வரை லாபம் ஈட்டின.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“