ஒரே நாளில் 2.60 சதவீதம் சரிந்த ஆக்ஸிஸ்.. தற்போதைய நிலவரம் என்ன?

தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃப்டி 50 0.25 புள்ளிகள் உயர்ந்து 18,118.30 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 37.08 புள்ளிகள் அல்லது 0.06% உயர்ந்து 60,978.75 ஆகவும் முடிந்தது.

Share Market Today 24 January 2023
பங்குச் சந்தை இன்றைய நிலவரம் ஜனவரி 24, 2023

இந்திய பங்கு குறியீடுகள் செவ்வாய் கிழமை (ஜன.24) நிலையற்ற அமர்வில் வர்த்தகமாகின. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 18,100க்கு மேலேயும், மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 61,000க்கு கீழேயும் முடிந்தது.
என்எஸ்இ நிஃப்டி 50 0.25 புள்ளிகள் உயர்ந்து 18,118.30 ஆகவும், பிஎஸ்இ சென்செக்ஸ் 37.08 புள்ளிகள் அல்லது 0.06% உயர்ந்து 60,978.75 ஆகவும் முடிந்தது.

டாடா மோட்டார்ஸ், மாருதி சுஸுகி, பஜாஜ் ஆட்டோ, பிரிட்டானியா மற்றும் எச்சிஎல் டெக் ஆகியவை நிஃப்டியின் அதிக லாபம் ஈட்டுன. மறுபுறம் ஆக்சிஸ் வங்கி, ஹிண்டால்கோ, டாக்டர் ரெட்டி, பவர் கிரிட் மற்றும் எஸ்பிஐ லைஃப் ஆகியவை அதிக நஷ்டம் அடைந்தன.

சென்செக்ஸ், நிஃப்டி

என்எஸ்இ நிஃப்டி 50 0.25 புள்ளிகள் உயர்ந்து 18,118.30 ஆகவும், பிஎஸ்இ சென்செக்ஸ் 37.08 புள்ளிகள் அல்லது 0.06% உயர்ந்து 60,978.75 ஆகவும் முடிந்தது.

ஆக்ஸிஸ் வங்கி பங்குகள் சரிவு

ஆக்சிஸ் வங்கியின் பங்குகள் கடந்த 6 மாதங்களில் 24% மற்றும் கடந்த 5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 50% உயர்ந்துள்ளன. ஜனவரி 4, 2023 அன்று பங்குகள் 52 வாரங்களில் அதிகபட்சமாக ரூ.970.45 ஆகவும், ஜூன் 23, 2022 அன்று 52 வாரங்களில் குறைந்தபட்சமாக ரூ.618.10 ஆகவும் இருந்தன.

இந்த நிலையில் 2022-23ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டு முடிவுகள் வெளியான நிலையில், ஆக்சிஸ் வங்கியின் பங்கு விலை செவ்வாய்கிழமை லாப முன்பதிவில் 2.60% சரிந்து ரூ 909.10 ஆக இருந்தது. வங்கி 2023 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ 5,853 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. ஆண்டுக்கு 62% ஆகும்.

அதேநேரம், நிகர வட்டி வருமானம் (NII) 32% அதிகரித்து ரூ. 11,459 கோடியாக இருந்தது. நிகர வட்டி வரம்பு (NIM) டிசம்பர் 31 நிலவரப்படி 4.26% ஆக இருந்தது. இது வருடத்தில் 73 bps அதிகரித்து உள்ளது.
மேலும், மொத்தச் செயல்படாத சொத்து விகிதம் (NPA) டிசம்பர் 31 நிலவரப்படி 2.38% ஆக இருந்தது, இது ஆண்டுக்கு 79 bps குறைந்துள்ளது. நிகர NPA விகிதம் 0.47% ஆக இருந்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Nifty settles above 18100 sensex below

Exit mobile version