இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (மே4) லாபத்தில் வணிகத்தை நிறைவு செய்தன. தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 165.95 புள்ளிகள் அல்லது 0.92% உயர்ந்து 18,255.8 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 555.95 புள்ளிகள் அல்லது 0.91% உயர்ந்து 61,749.25 ஆகவும் காணப்பட்டது.
துறைசார் குறியீடுகளில், பேங்க் நிஃப்டி 372.75 புள்ளிகள் அல்லது 0.86% உயர்ந்து 43,685.45 ஆகவும், நிஃப்டி ஃபைனான்சியல் சர்வீசஸ் 297.1 புள்ளிகள் அல்லது 1.55% உயர்ந்து 19,479.35 ஆகவும், நிஃப்டி PSU வங்கி 3.4,123% ஆகவும் உயர்ந்து காணப்பட்டது.
நிஃப்டி 50 இல் அதானி எண்டர்பிரைசஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி, எஸ்பிஐ லைஃப் மற்றும் எச்டிஎஃப்சி வங்கி ஆகியவை அதிக லாபம் ஈட்டின.
இண்டஸ்இண்ட் வங்கி, யுபிஎல், நெஸ்லே இந்தியா, பவர் கிரிட் மற்றும் ஐடிசி ஆகியவை நஷ்டமடைந்தன.
மேலும் இன்றைய வணிகத்தில் அதானி எண்டர்டெயிண்ட் பங்குகள் உச்சத்தில் காணப்பட்டன. அந்தப் பங்குகள் 5 சதவீதம் வரை உயர்வை கண்டன என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“