இந்தியப் பங்குச் சந்தை உள்நாட்டு குறியீடுகள் வாரத்தின் கடைசி வர்த்தக அமர்வை பச்சை நிறத்தில் முடித்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 46.35 புள்ளிகள் அல்லது 0.25% முன்னேறி 18,534.10 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 118.57 புள்ளிகள் அல்லது 0.19% அதிகரித்து 62,547.11 ஆகவும் இருந்தது.
துறைசார் குறியீடுகளில், பேங்க் நிஃப்டி 147.65 புள்ளிகள் அல்லது 0.34% உயர்ந்து 43,937.85 ஆக காணப்பட்டது. தொடர்ந்து, நிஃப்டி ஆட்டோ 0.92%, நிஃப்டி மெட்டல் 1.22%, நிஃப்டி ரியாலிட்டி 1.42% உயர்ந்து காணப்பட்டது.
எனினும், நிஃப்டி ஐடி 0.40% சரிந்து காணப்பட்டது. நிஃப்டி 50 இல் ஹிண்டால்கோ, ஹீரோமோட்டோகார்ப், அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ், டாடா ஸ்டீல் மற்றும் மாருதி சுஸுகி ஆகியவை அதிக லாபம் ஈட்டின.
மறுபுறம், அதானி எண்டர்பிரைசஸ், பிபிசிஎல், ஹெச்டிஎஃப்சி லைஃப், டிசிஎஸ் மற்றும் விப்ரோ ஆகியவை நஷ்டமடைந்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“