Stock Market Highlights : வாரத்தின் முதல் நாளான இன்று இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் திங்கள்கிழமை வர்த்தக அமர்வை லாப-நஷ்டம் இன்றி நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃப்டி-50 30 புள்ளிகள் அதிகரித்து 19,674.55 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 14.54 புள்ளிகள் அதிகரித்து 66,023.69 ஆகவும் முடிந்தது.
மேலும், நிஃப்டி நெக்ஸ்ட் 50 மற்றும் நிஃப்டி 100 தவிர, பரந்த குறியீடுகள் பெரும்பாலும் உயர்வில் நிலைபெற்றன. பேங்க் நிஃப்டி குறியீடு 150 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து 44,766.10 ஆக இருந்தது.
துறைசார் குறியீடுகளின் லாபங்கள் ரியாலிட்டி பங்குகளால் வழிநடத்தப்பட்டன. இது 1.59% உயர்ந்தது, அதைத் தொடர்ந்து வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் FMCG பங்குகள் உயர்ந்தன.
மறுபுறம், ஐடி, மீடியா, மெட்டல், பார்மா மற்றும் ஆட்டோ பங்குகள் திருத்தங்களை சந்தித்தன.
ஐ.டி. பங்குகள்
இன்ட்ரா டே வர்த்தகத்தின் போது நிஃப்டி ஐடி குறியீடு 290 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ ஆகிய நிறுவனங்கள் 1.53% மற்றும் 1% சரிவுடன் முன்னணியில் காணப்பட்டன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“