stock market Highlights: இந்திய பங்கு குறியீடுகளான பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் என்எஸ்இ நிஃப்டி 50 ஆகியவை புதன்கிழமை வர்த்தக அமர்வை உயர்வில் நிறைவுசெய்தன.
தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃப்டி-50 0.26% அதிகரித்து 19,716.45 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 170 புள்ளிகள் அதிகரித்து 66,118.69 ஆகவும் காணப்பட்டது.
மிட்கேப்ஸ் மற்றும் ஸ்மால்கேப்ஸ் பங்குகள் முன்னிலையில் இருந்ததால் பார்டர் குறியீடுகள் பச்சை நிறத்தில் நிலைபெற்றன. வங்கி நிஃப்டி குறியீடு 0.08% சரிந்து 44,588.30 ஆக இருந்தது.
மற்ற துறை குறியீடுகளும் பச்சை நிறத்தில் பரந்த அளவில் நிலைபெற்றன. பார்மா, பிஎஸ்யு வங்கி மற்றும் எஃப்எம்சிஜி பங்குகள் மற்ற துறை குறியீடுகளில் ஏற்றம் கண்டன.
அதே நேரத்தில் நிதி சேவைகள் பங்குகள் வீழ்ச்சியைக் கண்டன.
இந்திய பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் உள்நாட்டு குறியீடுகள் புதன்கிழமை (செப்.27) வர்த்தக அமர்வை நேர்மறையாக முடித்தது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியுற செய்துள்ளது.
பார்மா பங்குகள்
புதன்கிழமை இன்ட்ரா டே வரத்தகத்தின் போது நிஃப்டி பார்மா குறியீடு 1.24% உயர்ந்தது. கிரானுல்ஸ் இந்தியா 3.88% மற்றும் அரபிந்தோ ஃபார்மா 2.21% ஆதாயங்களைப் பெற்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“