Share Market News Today: இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் ரியாலிட்டி மற்றும் வங்கி பங்குகளின் உதவியுடன் வாரத்தின் கடைசி வர்த்தக அமர்வை லாபத்தில் முடித்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 0.47% அதிகரித்து 19,819.95 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 333.35 புள்ளிகள் அதிகரித்து 66,598.91 ஆகவும் முடிவுற்றது.
வங்கி நிஃப்டி
வங்கி நிஃப்டி 0.62% அதிகரித்து 45,156.40 ஆக இருந்தது. பரந்த குறியீடுகளும் உயர்வில் வர்த்தகத்தை நிறைவு செய்தன. மற்ற துறைகளிலும், நிஃப்டி ரியாலிட்டி இன்டெக்ஸ் 2.12% ஏற்றத்துடன் முன்னணியில் இருந்தது.
நிதிச் சேவைகள், ஆட்டோ மற்றும் வங்கிப் பங்குகள் லாபத்திற்கு மற்ற பங்களிப்பாளர்களாக இருந்தன.
அதேசமயம் எஃப்எம்ஜிசி (FMCG), ஐ.டி. (IT), மீடியா (Media), மெட்டல் (Metal) மற்றும் பார்மா (Pharma) பங்குகள் திருத்தங்களை எதிர்கொண்டன.
சந்தையில் ஒப்பீட்டு ஏற்ற இறக்கம் குறைவாக இருந்தது மற்றும் VIX 0.85% கீழே வர்த்தகமானது.
வங்கி பங்குகள் நிலவரம்
வெள்ளிக்கிழமை வர்த்தக அமர்வின் போது வங்கி நிஃப்டி 1.09% உயர்ந்து 45,367.10 ஆக இருந்தது. பந்தன் வங்கி, பாங்க் ஆப் பரோடா மற்றும் தி ஃபெடரல் வங்கி ஆகியவை முறையே 2.18%, 1.81%, 1.55% ஏற்றத்துடன் முன்னணியில் உள்ளன.
கச்சா எண்ணெய் வர்த்தகம்
உலகளாவிய அளவுகோல் பிரென்ட் கச்சா எண்ணெய் வியாழக்கிழமை அன்று ஒரு பீப்பாய்க்கு $90 க்கு கீழே காணப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“