இந்தியப் பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை வர்த்தகத்தை உயர்வில் நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 38.30 புள்ளிகள் அல்லது 0.22% உயர்ந்து 17,398.05 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 114.92 புள்ளிகள் அல்லது 0.19% உயர்ந்து 59,106.44 ஆகவும் இன்றைய வர்த்தகத்தை நிறைவு செய்தது.
நிஃப்டி-50ல் ஹீரோ மோட்டோகார்ப், கோல் இந்தியா, பஜாஜ் இந்தியா, மாருதி மற்றும் டிவிஸ் லேப் ஆகியவை அதிக லாபம் ஈட்டியுள்ளன. இதில், ஹீரோ மோட்டோகார்ப் பங்குகள் 3 சதவீதம் வரை உயர்வை கண்டன.
மறுபுறும், பிபிசிஎல், அதானி எண்டர்பிரைசஸ், அப்பல்லோ மருத்துவமனை. இன்ஃபோசிஸ் மற்றும் ஐடிசி ஆகியவை நஷ்டமடைந்தன.
வங்கி நிஃப்டி
பேங்க் நிஃப்டி 204.40 புள்ளிகள் அல்லது 0.50% உயர்ந்து 40,813.05 ஆக இருந்தது. அதேபோல் இன்றைய வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் பொருள்களும் விலை அதிகரித்து காணப்பட்டன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“