இந்தியப் பங்குச் சந்தை உள்நாட்டு குறியீடுகள் நஷ்டத்தில் புதன்கிழமை (மே3) அமர்வை முடித்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 57.8 புள்ளிகள் அல்லது 0.32% சரிந்து 18,089.85 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 161.41 புள்ளிகள் அல்லது 0.26% சரிந்து 61,193.3 ஆகவும் இருந்தது.
துறைசார் குறியீடுகளில், பேங்க் நிஃப்டி 39.4 புள்ளிகள் 0.09% குறைந்து 43,312.7 ஆகவும், நிஃப்டி ஐடி 281.25 புள்ளிகள் அல்லது 1% சரிந்து 27,743.75 ஆகவும் காணப்பட்டது.
ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், அல்ட்ராடெக் சிமென்ட் மற்றும் ஐடிசி ஆகியவை நிஃப்டி 50 இல் அதிக லாபம் ஈட்டின.
அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், ஓஎன்ஜிசி, யுபிஎல் மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை அதிக நஷ்டத்தை சந்தித்தன.
ரெயில் விகாஸ் நிகாம் பங்குகள்
ரயில் விகாஸ் நிகாமின் பங்கு விலை 73% உயர்ந்து, காணப்பட்டது. இந்தப் பங்குகள் ஏப்ரல் 3 அன்று ரூ.75.2ல் காணப்பட்டது. தற்போது, ஒரு பங்கின் விலை ஸ்கிரிப் என்எஸ்இயில் ரூ.130.1 இன் இன்ட்ராடே வர்த்தகத்தில் அதிகபட்சத்தைத் தொட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“