உலகளாவிய எதிர்மறை குறிப்புகளுக்கு மத்தியில் இந்தியப் பங்குச் சந்தைகள் ஆக.1ஆம் தேதி வர்த்தகத்தை சரிவில் நிறைவு செய்தன.
தொடர்ந்து, தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 20.25 புள்ளிகள் அல்லது 0.10% குறைந்து 19,733.55 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 68.36 புள்ளிகள் அல்லது 0.10% சரிந்து 66,459.31 ஆகவும் இருந்தது.
துறைசார் குறியீடுகளில், பேங்க் நிஃப்டி 58.60 புள்ளிகள் அல்லது 0.13% சரிந்து 45,592.50 ஆக காணப்பட்டது. மேலும், நிஃப்டி ஆட்டோ 0.12% சரிந்தது; நிஃப்டி PSU வங்கி 0.52% மற்றும் நிஃப்டி ரால்டி 1.77% சரிந்தன.
எனினும், நிஃப்டி ஐடி 1.2% உயர்ந்தது. நிஃப்டி-50ல் கோல் இந்தியா, என்டிபிசி, டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக் மற்றும் எல்டிஐஎம் ஆகியவை அதிக லாபம் ஈட்டின.
பவர் கிரிட், ஹீரோ மோட்டோகார்ப், அப்பல்லோ மருத்துவமனை, அதானி போர்ட்ஸ் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் ஆகியவை அதிக சரிவை சந்தித்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“