share-market | இந்திய பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வெள்ளிக்கிழமை (நவ.24) வர்த்தக அமர்வை எதிர்மறையாக நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃப்டி-50 7.30 புள்ளிகள் அல்லது 0.04% குறைந்து 19,790.55 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 47.77 புள்ளிகள் அல்லது 0.07% குறைந்து 65,970.04 ஆகவும் காணப்பட்டது.
ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் பங்குகளின் குறியீடுகள் பெரும்பாலும் கலவையாக முடிவடைந்தன. பேங்க் நிஃப்டி குறியீடு 191.60 புள்ளிகள் அல்லது 0.44% அதிகரித்து 43,769.10 புள்ளிகளில் நிலைத்தது.
ஹெல்த்கேர் மற்றும் பேங்கிங் உள்பட மற்ற துறை குறியீடுகள் லாபம் பெற்றன. அதே நேரத்தில் ஐ.டி (IT) மற்றும் எஃப்.எம்.ஜி.சி (FMCG) பங்குகள் வீழ்ச்சியடைந்தன.
அதானி எண்டர்பிரைசஸ், சிப்லா, டிவிஸ் லேப்ஸ், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அதானி போர்ட்ஸ் & எஸ்இஇசட் ஆகியவை என்எஸ்இ நிஃப்டி 50-ல் அதிக லாபம் ஈட்டின.
அதே சமயம் பின்தங்கிய நிறுவனங்களில் விப்ரோ, அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ், எச்சிஎல் டெக்னாலஜிஸ், டிசிஎஸ் மற்றும் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை உள்ளன. இந்திய ஏற்ற இறக்கம் குறியீடு (இந்தியா VIX) 0.13% வரை நிறைவடைந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“