வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 17,800 க்கும் கீழேயும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 59,700 க்கு கீழே வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அந்த வகையில், 30-பங்குகள் கொண்ட பிஎஸ்இ பெஞ்ச்மார்க் 221.58 புள்ளிகள் அல்லது 0.35% சரிந்து 59,736.45 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி 50 0.33% குறைந்து 17,799.30 ஆகவும் காணப்பட்டது.
சென்செக்ஸின் டாடா ஸ்டீல், என்டிபிசி, இண்டஸ்இண்ட் வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் பவர் கிரிட் ஆகியவை அதிக லாபம் ஈட்டியுள்ளன.
மறுபுறம், எச்சிஎல் டெக், லார்சன் & டூப்ரோ, விப்ரோ, டெக் மஹிந்திரா மற்றும் சன் பார்மா ஆகியவை அதிக நஷ்டமடைந்தன.
வங்கி பங்குகள்
மேலும், HCL Tech பங்குகள் 2.7% சரிந்து ரூ. 1042.00 ஆக இருந்தது. துறைசார் குறியீடுகளில், நிஃப்டி வங்கி 0.12% சரிந்தது, நிஃப்டி ஐடி 1.38% சரிந்தது, நிஃப்டி பார்மா 0.34% சரிந்தது, நிஃப்டி பொதுத்துறை வங்கி 1.14% உயர்ந்தது. ஏற்ற இறக்கக் குறியீடு இந்தியா VIX 0.06% அதிகரித்துள்ளது.
ஆசிய பங்குச் சந்தைகள்
சீனாவின் ஷாங்காய் கூட்டுக் குறியீடு வெள்ளிக்கிழமை 17.64 புள்ளிகள் அல்லது 0.56% உயர்ந்து 3,181.09 ஆக இருந்தது.
ஹாங்காங்கின் ஹாங் செங் 35.32 புள்ளிகள் அல்லது 0.16% உயர்ந்து 21,549.42 ஆக இருந்தது.
ஜப்பானின் நிக்கேய் 225 272.86 புள்ளிகள் அல்லது 1.03% சரிந்து 26,176.96 ஆக இருந்தது. வியாழன் அன்று அமெரிக்க பங்குச்சந்தைகள் பச்சை நிறத்தில் முடிவடைந்தன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/