scorecardresearch

HCL டெக் பங்குகள் 3% வீழ்ச்சி.. நிஃப்டி 17800க்கு கீழ் சரிவு

HCL டெக் பங்குகள் வெள்ளிக்கிழமை 2.7% சரிந்து ரூ 1042.00 ஆக இருந்தது, இன்ஃபோசிஸ் பங்குகள் சற்றே உயர்ந்து ரூ 1,484 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது.

Stock Market Today 24 March 2023
வெள்ளிக்க்கிழமை வர்த்தகத்தை இந்திய சந்தைகள் வீழ்ச்சியுடன் நிறைவு செய்தன.

வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 17,800 க்கும் கீழேயும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 59,700 க்கு கீழே வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அந்த வகையில், 30-பங்குகள் கொண்ட பிஎஸ்இ பெஞ்ச்மார்க் 221.58 புள்ளிகள் அல்லது 0.35% சரிந்து 59,736.45 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி 50 0.33% குறைந்து 17,799.30 ஆகவும் காணப்பட்டது.

சென்செக்ஸின் டாடா ஸ்டீல், என்டிபிசி, இண்டஸ்இண்ட் வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் பவர் கிரிட் ஆகியவை அதிக லாபம் ஈட்டியுள்ளன.
மறுபுறம், எச்சிஎல் டெக், லார்சன் & டூப்ரோ, விப்ரோ, டெக் மஹிந்திரா மற்றும் சன் பார்மா ஆகியவை அதிக நஷ்டமடைந்தன.

வங்கி பங்குகள்

மேலும், HCL Tech பங்குகள் 2.7% சரிந்து ரூ. 1042.00 ஆக இருந்தது. துறைசார் குறியீடுகளில், நிஃப்டி வங்கி 0.12% சரிந்தது, நிஃப்டி ஐடி 1.38% சரிந்தது, நிஃப்டி பார்மா 0.34% சரிந்தது, நிஃப்டி பொதுத்துறை வங்கி 1.14% உயர்ந்தது. ஏற்ற இறக்கக் குறியீடு இந்தியா VIX 0.06% அதிகரித்துள்ளது.

ஆசிய பங்குச் சந்தைகள்

சீனாவின் ஷாங்காய் கூட்டுக் குறியீடு வெள்ளிக்கிழமை 17.64 புள்ளிகள் அல்லது 0.56% உயர்ந்து 3,181.09 ஆக இருந்தது.
ஹாங்காங்கின் ஹாங் செங் 35.32 புள்ளிகள் அல்லது 0.16% உயர்ந்து 21,549.42 ஆக இருந்தது.

ஜப்பானின் நிக்கேய் 225 272.86 புள்ளிகள் அல்லது 1.03% சரிந்து 26,176.96 ஆக இருந்தது. வியாழன் அன்று அமெரிக்க பங்குச்சந்தைகள் பச்சை நிறத்தில் முடிவடைந்தன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Nifty slips below 17800 sensex tanks 200 pts in early trade on friday

Best of Express