இன்றைய பங்கு வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 721 புள்ளிகள் அல்லது 1.2% உயர்ந்து 60,566 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதே நேரத்தில் தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50, 208 புள்ளிகள் அல்லது 1% அதிகரித்து 18,015 இல் நிறைவடைந்தது. அனைத்து துறை குறியீடுகளும் பச்சை நிறத்தில் முடிவடைந்தன.
சந்தையில், பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 2.3% மற்றும் ஸ்மால்கேப் குறியீடு 3% அதிகரித்தது. எஸ்பிஐ, இண்டஸ்இந்த், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல் மற்றும் கோல் இந்தியா ஆகியவை நிஃப்டியில் அதிக லாபம் ஈட்டின.
மறுபுறம், திவிஸ் லேப், சிப்லா, டாக்டர் ரெட்டிஸ் லேபரேட்டரீஸ், நெஸ்லே இந்தியா மற்றும் கோடாக் மஹிந்திரா வங்கி ஆகியவை பின்தங்கின.
என்டிடிவி பங்குகள் உயர்வு
தனிப்பட்ட பங்குகளில், என்டிடிவி நிறுவனத்தின் நிறுவனர்களான பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகியோர் செய்தி ஒளிபரப்பு நிறுவனத்தில் 27.26% பங்குகளை அதானி குழுமத்திற்கு விற்க முடிவு செய்த பிறகு, NDTV இன் பங்குகள் 5% க்கு மேல் அதிகரித்தது.
ரூபாய் மதிப்பு உயர்வு
இதற்கிடையில், வெள்ளியன்று 82.86 ஆக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு திங்களன்று ஒரு டாலருக்கு 21 காசுகள் உயர்ந்து 82.65 ஆக இருந்தது.
பூனாவல்லா ஃபின்கார்ப் பங்குகள்
மேலும் திங்களன்று பூனாவல்லா ஃபின்கார்ப் பங்குகள் 13% உயர்ந்து ரூ.279.20 ஆக இருந்தது. பங்குகள் இன்ட்ராடே அதிகபட்சமாக 279.20 மற்றும் குறைந்தபட்சமாக 248.00 ஐ தொட்டன.
கடந்த வாரம் சரிவை நோக்கி சென்ற பங்குச் சந்தைகள் இந்த வாரத்தின் தொடக்கத்தின் முதல் நாளே மீட்சியை கண்டுள்ளது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/