கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் பாரதிய ஜனதா பொருளாதார பிரிவு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், “கிரிப்டோகரன்சி என்பது பணம் அல்ல. அதில் முதலீடு செய்யாதீர்கள். இதனை நான் மீண்டும் உங்களுக்கு நினைவுப்படுத்திக் கொள்கிறேன்.
கிரிப்டோகரன்சி விவகாரத்தில் உலக நாடுகள் எச்சரிக்கையுடன் உள்ளன. ஆகவே நான் பேசுவதை எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளுங்கள். தொழில்நுட்பம் அபரிதமான வளர்ச்சியை எட்டியுள்ளன.
ஆகையால் கிரிப்டோ முதலீடு எளிதானது என்பதை அறிவேன். ஆகவே கிரிப்டோ குறித்து மீண்டும் எச்சரிக்கிறேன்.
கிரிப்டோகரன்சி குறித்து அனைவரும் கவலைப்பட வேண்டும். மேலும் கிரிப்டோகரன்சியின் செயல்பாட்டையும் கவனித்துவாருங்கள். அத குறித்து எச்சரிக்கையாக இருங்கள்” என்றார்.
கிரிப்டோகரன்சி முதலீடு இந்தியாவில் அங்கீகரிக்கப்படவில்லை. எனினும் இந்தியாவில் கிரிப்டோ கரன்சி வருமானத்தின் மீது 30 சதவீத வரி விதிக்கப்படுகிறது.
முன்னதாக இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்த தாஸ் கிரிப்டோகரன்சி முதலீடு ஆபத்தானது என எச்சரித்திருந்தார். மேலும் இந்த முதலீடு சமூக விரோத செயல்களுக்கும் துணை போகிறது எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil