ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) இயக்குநர்கள் குழுவில் இருந்து நீதா அம்பானி திங்கள்கிழமை விலகினார். தொடர்ந்து அவரது குழந்தைகள் ஈஷா, ஆகாஷ் மற்றும் ஆனந்த் ஆகியோரை ரிலையன்ஸ் இயக்குநர்கள் வாரியத்தில் நிர்வாகமற்ற இயக்குநர்களாக உருவெடுத்துள்ளனர்.
முன்னதாக, ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்திற்கு முன்னதாக, இரட்டையர்களான ஈஷா மற்றும் ஆகாஷ் மற்றும் ஆனந்த் ஆகியோரை "நிறுவனத்தின் நிர்வாகமற்ற இயக்குநர்களாக" நியமிப்பதற்கு ஒப்புதல் அளிக்க ரிலையன்ஸ் வாரியம் கூடியது.
இது தொடர்பான செய்திக் குறிப்பில், “பங்குதாரர்களின் ஒப்புதலுக்குப் பிறகு அவர்கள் பதவி ஏற்கும் தேதியிலிருந்து அவர்களின் நியமனம் அமலுக்கு வரும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவராக நீடா அம்பானி நீடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, முகேஷ் அம்பானி ஆகாஷ் அம்பானியை இந்தியாவின் மிகப்பெரிய மொபைல் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் தலைவராக ஆக்கினார்.
ஜியோ இன்ஃபோகாம் என்பது ஜியோ பிளாட்ஃபார்ம்களின் துணை நிறுவனமாகும், இதில் மெட்டா மற்றும் கூகுள் பங்குகளை வைத்திருக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“