நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) புதன்கிழமை (மார்ச் 29) யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு எந்த கூடுதல் கட்டணமும் இல்லை எனத் தெளிவுப்படுத்தி உள்ளது.
யூபிஐ எனப்படும் ஆன்லைன் பேமெண்ட்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று செய்திகள் பரவின.
இது தொடர்பாக பேடிஎம் உள்ளிட்ட ஆன்லைன் பேமெண்ட் செயலிகள் விளக்கம் அளித்தன. அந்த விளக்கத்தில் அப்படி எந்தத் திட்டமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) புதன்கிழமை (மார்ச் 29) விளக்க அளிக்ககை ஒன்று வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ) யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு எந்த கூடுதல் கட்டணமும் இல்லை எனத் தெளிவுப்படுத்தி உள்ளது. நாடு முழுக்க பரவிய செய்தியில் ரூ.2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.
இருப்பினும், பிபிஐ (ப்ரீபெய்ட் பேமென்ட் இன்ஸ்ட்ரூமென்ட்) வணிகப் பரிவர்த்தனைகளுக்கு ஒரு பரிமாற்றக் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக NPCI கூறியது. ஆனால் வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது.
தொடர்ந்து, அறிமுகப்படுத்தப்பட்ட பரிமாற்றக் கட்டணங்கள் பிபிஐ வணிகப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு எந்தக் கட்டணமும் இல்லை, மேலும் வங்கிக் கணக்கு அடிப்படையிலான UPI கட்டணங்களுக்கு (அதாவது சாதாரண UPI கட்டணங்கள்) வங்கிக் கணக்கிற்கு எந்தக் கட்டணமும் இல்லை என்று மேலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது" NPCI கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“