ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) ஞாயிற்றுக்கிழமை (மே 22) ஆவணங்கள் இல்லாமல் ரூ.2000 நோட்டுகளை ரூ.20,000 வரை மாற்றிக்கொள்ளலாம் எனத் தெரிவித்தது.
இது தொடர்பாக அனைத்து உள்ளூர் தலைமை அலுவலகங்களின் தலைமைப் பொது மேலாளருக்கும் செய்தி அறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதில், “பொதுமக்கள் ரூ.2000 நோட்டுகளை ஒரே நேரத்தில் ரூ.20,000 வரை மாற்றிக்கொள்ளும் வசதி எந்த ஆவணங்களும் பெறாமல் அனுமதிக்கப்படும் என்று தெரிவித்தது.
அத்தகைய நோட்டுகளை சொந்தக் கணக்கில் டெபாசிட் செய்வது தொடர்பாக, ரிசர்வ் வங்கி எந்த வரம்பையும் குறிப்பிடவில்லை, ஆனால் அது தற்போதுள்ள உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (KYC) விதிமுறைகள் மற்றும் பொருந்தக்கூடிய பிற சட்டரீதியான தேவைகளுக்கு இணங்க வேண்டும்.
"மேலும், பரிமாற்றத்தின் போது டெண்டர்தாரர் எந்த அடையாளச் சான்றும் சமர்ப்பிக்கத் தேவையில்லை," என்று எஸ்.பி.ஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து, எந்தவொரு சிரமமும் இன்றி இந்தப் பணியை
சீராகவும், தடையின்றியும் நடைபெற, பொதுமக்களுக்கு அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குமாறு அதன் உள்ளூர் தலைமை அலுவலகங்களை கேட்டுக் கொண்டுள்ளது.
முன்னதாக, ரிசர்வ் வங்கி 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக வெள்ளிக்கிழமை (மே 21) அறிவித்தது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“