நீங்க பேங்க் அக்கவுண்ட் ஆரம்பிக்க சரியான நேரம் இது... ஆஃபர்களை அள்ளி வீசிய 4 முக்கிய வங்கிகள்

வங்கிக் கணக்கை நிர்வகிக்க இருப்பு தொகையை பராமரிக்க வேண்டும் என்ற விதியை நான்கு முக்கிய வங்கிகள் தளர்த்தியுள்ளன. இதன் மூலம் சாமானிய மக்கள் பயன் பெறுவார்கள் என்று கருதப்படுகிறது.

வங்கிக் கணக்கை நிர்வகிக்க இருப்பு தொகையை பராமரிக்க வேண்டும் என்ற விதியை நான்கு முக்கிய வங்கிகள் தளர்த்தியுள்ளன. இதன் மூலம் சாமானிய மக்கள் பயன் பெறுவார்கள் என்று கருதப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Investment of SSY Scheme in Rs 4000 will become Rs22 lakh on maturity

வங்கிகளில் தொடங்கப்படும் ஒவ்வொரு சேமிப்பு கணக்கிலும் குறிப்பிட்ட இருப்பு தொகையை பராமரிக்க வேண்டியது கட்டாயம் என்ற நிலை இருந்து வருகிறது. இந்த தொகையை Average Monthly Balance என்று கூறுகின்றனர். இது ஒவ்வொரு வங்கிக்கும் ஏற்ற வகையில் அடிக்கடி மாறுபடும். இந்த தொகையை சரியாக பராமரிக்கவில்லை என்றால் வங்கி தரப்பில் இருந்து அபராதம் விதிக்கப்படும். ஆனால், முக்கியமான நான்கு வங்கிகள் இந்த விதியை தற்போது தளர்த்தி உள்ளன.

Advertisment

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ):

இந்த மாற்றத்திற்கு முன்னோடியாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா விளங்குகிறது. ஏனெனில், கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் இந்த விதியை நீக்கியுள்ளதாக எஸ்.பி.ஐ ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, எஸ்.பி.ஐ வங்கியின் அனைத்து சேமிப்பு கணக்குகளுக்கும் இருப்பு தொகை பராமரிக்க வேண்டிய அவசியம் கிடையாது.

கனரா வங்கி:

Advertisment
Advertisements

அடுத்தபடியாக, மாதாந்திர இருப்பு தொகையை சேமிப்பு கணக்குகள் கடைபிடிக்க வேண்டியதில்லை என கனரா வங்கியும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியது. குறிப்பாக, இந்த ஆண்டின் மே மாதம் முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது.

பஞ்சாப் நேஷனல் வங்கி:

இந்த இரு வங்கிகளை தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கியிலும் சேமிப்பு கணக்குகளுக்கு சராசரியாக பராமரிக்க வேண்டிய இருப்பு தொகை தேவை இல்லை என்று முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம், இருப்பு தொகையை பராமரிக்கவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்ற நடைமுறை திரும்பப் பெறப்பட்டது.

இந்தியன் வங்கி:

இவை மட்டுமின்றி நாட்டின் முன்னணி வங்கியான இந்தியன் வங்கியும் இதே நடைமுறையை பின்பற்ற முடிவு செய்துள்ளது. அதாவது, ஜூலை 7-ஆம் தேதி முதல் அனைத்து விதமான சேமிப்பு கணக்குகளுக்கும் மாதாந்திர இருப்பு தொகை கட்டாயம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பு கணக்குகளை மேலும் சுதந்திரமாக பயன்படுத்த முடியும் என்று கருதப்படுகிறது. மேலும், இதே நடைமுறையை அனைத்து வங்கிகளும் கடைபிடித்தால், அபாரதத்தில் இருந்து விடுபட முடியும் என்று வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். வங்கிகளின் இந்த அறிவிப்பு மூலம் புதிதாக கணக்கு தொடங்க இருப்பவர்கள் மட்டுமின்றி, ஏற்கனவே கணக்கு கொண்டிருப்பவர்களும் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

bank

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: