scorecardresearch

ஆக்ஸிஸ் வங்கியின் உத்தரவாதத்தை இனி ஏற்க முடியாது : தொலைத் தொடர்புத் துறை அதிரடி முடிவு

ஏர்செல் நிறுவனம் அரசுக்கு 411 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. அலைக்கற்றை பயன்பாடு மற்றும் உரிமக்கட்டணம் என இந்த பாக்கித் தொகை செலுத்தப்படாமல் இருந்தது.

axis bank, Axis Bank Interest rate Axis net banking axis atm services Axis bank latest updates

ஆர்.சந்திரன்

இந்திய தொலைத்தொடர்புத் துறை இனி புதிதாக வழங்கப்படும் ஆக்ஸிஸ் வங்கியின் உத்தரவாதத்தை எந்த காரணத்திற்காகவும் ஏற்க முடியாது என கூறியுள்ளது. இது குறித்து, மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மற்றும்இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஏர்செல் நிறுவனம் சார்பில், ஆக்ஸிஸ் வங்கி சில உத்தரவாதங்களை தொலைத் தொடர்பு துறைக்கு வழங்கியிருந்தது. ஆனால், அண்மையில் ஏர்செல் நிறுவனம் பிரச்னையைச் சந்தித்தபோது, ஆக்ஸிஸ் நிறுவனம் அந்த வங்கி உத்தரவாதங்களை மதிக்கவில்லை; அதற்கான பொறுப்பை ஏற்காமல் போனது. இது மிகப் பெரிய நம்பிக்கை துரோகம். இந்திய அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்த மீறல். எனவே, இனி வரும் காலங்களில் இந்த வங்கியின் உத்தரவாதங்களை ஏற்க வேண்டாம் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தொலைத் தொடர்பு துறை கூறுகிறது. இது குறித்து தொலைத் தொடர்புத்துறை மார்ச் 16ம் தேதியின்று கடிதங்களை அனுப்பியுள்ளது

ஏர்செல் நிறுவனம் இந்திய அரசுக்கு 411 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. அலைக்கற்றை பயன்பாடு மற்றும் உரிமக்கட்டணம் என இந்த பாக்கித் தொகை செலுத்தப்படாமல் இருந்தது. அதன்பின் கடந்த பிப்ரவரி 28 அன்று ஏர்செல் திவால் அறிவிப்பு மனு தாக்கல் செய்ய, அது மார்ச் 8ம் தேதி ஏற்கப்பட்டது.

இந்நிலையில் எர்செல் நிறுவனத்திடமிருந்து 2300 மெகா ஹெட்ஸ் அலைக்கற்றையை பார்தி ஏர்டெல் நிறுவனம் வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தது. 8 தொலைத்தொடர்பு வட்டங்களில் இந்த அலைக்கற்றைக்காக 3,500 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது, அபபோது ஏர்டெல் நிறுவனம் சார்பில்தான் ஆக்ஸிஸ் வங்கி உத்தரவாதம் தந்ததாகவும், ஏர்செல் சார்பில் வழங்கவில்லை என்றும் வங்கித் தரப்பில் கூறப்படுகிறது. இது தொடர்பான பல்வேறு தகவல் பரிமாற்றங்களை அடுத்து, இப்போது தங்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்தையொட்டி, தொலைத் தொடர்பு துறை இந்த முடிவுக்கு வந்துள்ளதாக ஆக்ஸிஸ் வங்கியின் மேலாண் இயக்குனருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: No new bank guarantee from axis bank to be accepted orders dot