ரியல் எஸ்டேட் தொழிலை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு அரசு புதிதாக வாங்கும் கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தாள் கட்டணங்களை முழுமையாக ரத்து செய்துள்ளது.
இதுதொடர்பாக பத்திரப்பதிவு இன்ஸ்பெக்டர் ஜெனரல் வெளியிட்ட உத்தரவில், சொத்தின் பிரிக்கப்படாத பங்கிற்கு (யுடிஎஸ்) முத்திரை வரி மற்றும் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அதே நேரத்தில் புதிய குடியிருப்புகளுக்கு கட்டணங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
SBI Online: உஷாரு... ஆன்லைன் திருடர்களிடம் சிக்காமல் இருக்க இது முக்கியம்!
முத்திரை வரி மற்றும் பதிவு கட்டணத்தை ரத்து செய்தால் குடியிருப்புகளை பதிவு செய்வது அதிகமாகும் என சில துணை பதிவாளர் அலுவலகங்கள் கோரியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், புதிதாக கட்டப்பட்ட கட்டிடடங்களின் விற்பனைக்கு மட்டுமே இது பொருந்தும்.
மேலும், “பிரிக்கப்படாத நிலத்தின் முதல் விற்பனைக்கு பதிவு செய்ய ஒரு ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டால், பதிவு செய்யும் அலுவலர்கள் விற்பனை ஆவணத்தின் விஷயத்தில் கட்டிடத்தை சேர்க்கக் கோரவோ அல்லது வற்புறுத்தவோ கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.” என்று துணை பதிவாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின் மூலம் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மொத்த 11% முத்திரை வரி மற்றும் பதிவு கட்டணத்தை இனிமேல் வீட்டு உரிமையாளர்கள் செலுத்தத் தேவையில்லை.
SBI FD Rates: லேட்டஸ்ட் அப்டேட், லாபமா? நஷ்டமா?
முத்திரை வரி மற்றும் பதிவு கட்டணத்திற்கு யுடிஎஸ் மட்டுமே உட்படுத்த இந்த உத்தரவு வழிவகுக்கிறது என்று இந்திய பில்டர்ஸ் அசோசியேஷன் மாநில பொருளாளர் எஸ்.ராமபிரபு கூறினார்.
“உதாரணமாக, ரூ 60 லட்சம் செலவில் ஒரு புதிய பிளாட் வாங்கும் போது, அதில் யுடிஎஸ் ரூ 20 லட்சம், மீதமுள்ள ரூ 40 லட்சம் அபார்ட்மெண்டின் விலை. பூர்த்தி செய்யப்பட்ட திட்டங்களில் குடியிருப்புகளை வாங்குபவர்களுக்கு ஜிஎஸ்டியும் இருக்காது என்பதால் இது ஒரு வரவேற்புக்குரிய உத்தரவு" என்று அவர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.