பிப்ரவரி 1, 2024 அன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் எந்தவிதமான “கவர்ச்சியான அறிவிப்பும்” இருக்காது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை (டிச.7) தெரிவித்தார்.
தொடர்ந்து, பிப்ரவரி 1, 2024 பட்ஜெட் புதிய அரசு செயல்படும் வரை அரசின் செலவினங்களைச் சமாளிக்கும் வகையில் இருக்கும் என்றார்.
சிஐஐ உலகளாவிய பொருளாதாரக் கொள்கை மன்றத்தில் பேசிய சீதாராமன், 2024 கோடையில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு நாடு தயாராகும் என்றார்.
எனவே பிப்ரவரி 1 பட்ஜெட், பிரிட்டிஷ் பாரம்பரியத்தைப் பின்பற்றி, கணக்கு வாக்கு என்று அழைக்கப்படுகிறது.
“அந்த நேரத்தில் (in vote on account) அற்புதமான அறிவிப்புகள் எதுவும் வரவில்லை. எனவே புதிய அரசாங்கம் வந்து 2024 ஜூலையில் அடுத்த முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும், ”என்று சீதாராமன் கூறினார்.
பிப்ரவரி 1, 2024 அன்று, மக்களவையில் ஏப்ரல் 1, 2024 முதல் 2024-25 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை சீதாராமன் தாக்கல் செய்வார்.
கணக்கு வாக்கெடுப்பு என அறியப்படும் இடைக்கால பட்ஜெட், பொதுத் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரை, தற்போதைய அரசாங்கம் செலவினங்களை மேற்கொள்ள அனுமதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“