Advertisment

டீசல் வாகனங்களுக்கு 10% கூடுதல் ஜி.எஸ்.டி? நிதின் கட்காரி பதில்

டீசலில் இயங்கும் ஜெனரேட்டர்கள் மீதும் கூடுதல் ஜிஎஸ்டியை (GST) முன்மொழிவேன் என்று கூறிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, டீசல் வாகனங்கள் தயாரிப்பை நிறுத்துங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.

author-image
WebDesk
New Update
Nitin Gadkari said that Villupuram-Nagapatnam 4 lane road works will be completed by 2025

மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி.

டீசல் வாகனங்கள் விற்பனைக்கு கூடுதலாக 10 சதவீத ஜிஎஸ்டி (GST) விதிப்பது தொடர்பாக எந்த திட்டமும் அரசின் பரிசீலனையில் இல்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி செவ்வாய்க்கிழமை (செப்.12) தெரிவித்தார்.

Advertisment

இது தொடர்பாக ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “டீசல் வாகனங்கள் விற்பனைக்கு கூடுதலாக 10% ஜிஎஸ்டியை பரிந்துரைப்பதாக ஊடக அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
இதை தெளிவுபடுத்துவது அவசர தேவை. அரசின்  பரிசீலனையில் தற்போது அத்தகைய திட்டம் எதுவும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, டீசல் வாகனங்கள் மற்றும் ஜென்செட்டுகள் மீது 10 சதவீத கூடுதல் ஜிஎஸ்டி மாசு வரியை விதிக்கப்போவதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் புதுடெல்லியில் 63ஆவது ஆண்டு சியாம் மாநாட்டில் பேசும்போது கூறியதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்தன.

அதில் அதிகரித்துவரும் மாசுபாட்டை கருத்தில் கொண்டு டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட வேண்டும் என்ற கடிதத்தை இன்று மாலை நிதியமைச்சரிடம் ஒப்படைக்க உள்ளேன் என்று கட்காரி கூறியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

No such proposal underway: Nitin Gadkari on additional 10% GST on sale of diesel vehicles

அந்த நிகழ்ச்சியில் நிதின் கட்காரி, "டீசலுக்கு குட்பை சொல்லுங்கள். தயவு செய்து அவற்றை தயாரிப்பதை நிறுத்துங்கள். இல்லையெனில் டீசல் கார்களை விற்பனை செய்வது கடினமாகிவிடும் அளவுக்கு வரியை அதிகப்படுத்துவோம்" என்றார்.
மேலும், “டீசலில் இயங்கும் ஜெனரேட்டர்கள் மீதும் கூடுதல் ஜிஎஸ்டியை முன்மொழிவேன்” என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பாக கட்காரி ட்விட்டரில் அளித்த விளக்கத்தில், “2070 ஆம் ஆண்டிற்குள் கார்பன் நிகர பூஜ்ஜியத்தை அடைவதற்கும், டீசல் போன்ற அபாயகரமான எரிபொருளால் ஏற்படும் காற்று மாசுபாட்டின் அளவைக் குறைப்பதற்கும், வாகன விற்பனையில் விரைவான வளர்ச்சிக்கும் உறுதி ஏற்றுள்ளோம்.
அதன்படி, தீவிரமாக செயல்பட வேண்டியது அவசியம். ஆகவே, தூய்மையான மற்றும் பசுமையான மாற்று எரிபொருளுக்கு மாறுங்கள்.

இந்த எரிபொருள்கள் இறக்குமதி மாற்றீடுகளாகவும், செலவு குறைந்ததாகவும், சுதேசி மற்றும் மாசு இல்லாததாகவும் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது, ஆட்டோமொபைல்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது, வாகனத்தின் வகையைப் பொறுத்து கூடுதல் செஸ் 1 சதவீதம் முதல் 22 சதவீதம் வரை உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Gst Nitin Gadkari
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment