மானியமில்லாத எரிவாயு சிலிண்டர் விலை ரூ.147 உயர்வு – இன்று முதல் அமல்

நாட்டின் தலைநகரங்களில் விற்பனை செய்யப்படும் மானியமில்லாத 14 கிலோ எடை கொண்ட இன்டேன் கேஸ் சிலிண்டரின் விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணை விலை நிலவரத்துக்கு ஏற்ப, மாதந்தோறும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கிறது. அந்த…

By: February 12, 2020, 12:37:52 PM

நாட்டின் தலைநகரங்களில் விற்பனை செய்யப்படும் மானியமில்லாத 14 கிலோ எடை கொண்ட இன்டேன் கேஸ் சிலிண்டரின் விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணை விலை நிலவரத்துக்கு ஏற்ப, மாதந்தோறும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கிறது. அந்த வகையில் 14.2 கிலோ மானியமில்லாத சிலிண்டரின் விலை டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் விலை உயர்த்தப்பட்டுள்ளது.


டெல்லியில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.144.50 உயர்த்தப்பட்டு ரூ.858.50 ஆக விலை உள்ளது. சென்னையில் ரூ.147 உயர்த்தப்பட்டு ரூ.881 ஆக உள்ளது. கொல்கத்தாவில் ரூ.149 உயர்த்தப்பட்டு புதிய விலையாக ரூ.896 உள்ளது. மும்பையில் ரூ.145 உயர்த்தப்பட்டு ரூ.829.5 ஆக ஒரு சிலிண்டரின் விலை உள்ளது. இந்த விலை ஏற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Non subsidised lpg cylinder price hiked chennai

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X