List of Bank Holiday in November: ரிசர்வ் வங்கி நவம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் படி நவம்பர் மாதம் தீபாவளி, சாத் பண்டிகை உள்பட மொத்தம் 13 நாட்கள் வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும்.
வங்கிகள் மூடப்பட்டாலும், வாடிக்கையாளர்கள் வங்கிச் சேவைகளை ஆன்லைனில் தொடர்ந்து பெறலாம். இங்கு நாம் அக்.31 தீபாவளி கொண்டாடும் நிலையில் வட மாநிலங்களில் நவம்பர் 1-ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. அதன்படி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
நவம்பர் 1: தீபாவளி அமாவாசை
நவம்பர் 2: தீபாவளி (பாலி பிரதிபதா)
நவம்பர் 3: ஞாயிற்றுக்கிழமை
நவம்பர் 7: சாத் பண்டிகை
நவம்பர் 8: சாத் பண்டிகை
நவம்பர் 9: இரண்டாவது சனிக்கிழமை
நவம்பர் 10: ஞாயிறு
நவம்பர் 12: எகாஸ்-பாக்வால்
நவம்பர் 15: குருநானக் ஜெயந்தி
நவம்பர் 17: ஞாயிறு
நவம்பர் 18: கனகதாச ஜெயந்தி
நவம்பர் 23: செங் குட்ஸ்னெம், நான்காவது சனிக்கிழமை
நவம்பர் 24: ஞாயிறு
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“