Home loan application on WhatsApp | Indian Express Tamil

வாட்ஸ் அப்பில் ஹோம் லோன்.. விண்ணப்பிப்பது எப்படி?

பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் (பிஎச்எஃப்) அதன் ஆன்லைன் வீட்டுக் கடன் விண்ணப்பத்தை வாட்ஸ்அப்பில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Now borrow from Bajaj Housing Finance through WhatsApp
வாட்ஸ்அப்பில் ஹோம் லோனுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரரின் பெயர், மொபைல் எண், பான் எண் போன்ற சில விவரங்கள் மட்டுமே தேவைப்படும்.

Home Loan on WhatsApp: வீடு வாங்க ஆர்வமுள்ளவர்கள் வாட்ஸ்அப் மூலம் பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் வழங்கும் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதனை பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் (BHF) திங்கள்கிழமை (பிப்.6) அறிமுகப்படுத்தியது. இந்த வசதி சம்பளம் பெறும் வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் உதவிக்கரமாக இருக்கும்.

மேலும், சம்பளம் பெறும் விண்ணப்பதாரர்கள் புதிய வீட்டுக் கடன் மற்றும் வீட்டுக் கடன் இருப்பு பரிமாற்றம் ஆகிய இரண்டிற்கும் வாட்ஸ்அப் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று வீட்டு நிதி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நிறுவனத்தின் அறிக்கையின்படி, விண்ணப்பத்தில் விண்ணப்பதாரரின் பெயர், மொபைல் எண், பான் எண் போன்ற சில விவரங்கள் மட்டுமே தேவைப்படும். விவரங்களை வழங்கிய பிறகு, விண்ணப்பதாரர்கள் தங்களின் தகுதி மற்றும் சலுகைத் தொகையை உடனடியாகச் சரிபார்க்கலாம்.
டிஜிட்டல் கொள்கை அனுமதிக் கடிதத்தைப் பெற ஆர்வமுள்ளவர்கள் பெயரளவுத் தொகையாக ரூ. 1,999 + GST செலுத்த வேண்டும் என நிறுவனம் கூறியுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பத்தைத் தொடங்க BHFன் வாட்ஸ்அப் எண்ணான ‘75075 07315’க்குச் சென்று ‘ஹாய்’ சொல்லுங்கள்
உங்கள் வீட்டுக் கடன் தகுதியைச் சரிபார்த்து உடனடியாகச் சலுகை வழங்க 8 விவரங்களை மட்டும் (பெயர், தொடர்பு எண்கள், PAN, முதலியன) சமர்ப்பிக்கவும்
ரூ.1999 மற்றும் ஜிஎஸ்டி மட்டும் செலுத்தி டிஜிட்டல் கொள்கை அனுமதி கடிதத்தைப் பெறுங்கள்.

வட்டி

பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் வீட்டுக் கடன்கள் சம்பளம் மற்றும் தொழில்முறை விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டுக்கு 8.60% இல் தொடங்குகின்றன.
கடன் வாங்குபவர்கள் தங்கள் வட்டி விகிதத்தை ரெப்போ விகிதத்துடன் இணைக்க இது அனுமதிக்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Now borrow from bajaj housing finance through whatsapp