கொரோனா பரவல் காரணமாக பல மாநிலங்களில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, பல விமான போக்குவரத்து நிறுவனங்கள் விமான சேவையை குறைப்பது, டிக்கெட் விலையில் மாற்றம் ஏற்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு கோ ஃபர்ஸ்ட் (Go First) ஏர்லைன் நிறுவனம் விமானப் பயணிகளுக்கு தள்ளுபடி விலையில் டிக்கெட் விற்பனை செய்கிறது. புதிய ஆஃபரின் படி, கோ ஃபர்ஸ்ட் விமானத்தில் வெறும் 926 ரூபாய்க்கு பயணிக்கலாம்.
Right to Fly எனப்படும் இச்சலுகையின் கீழ் 926 ரூபாயில் இருந்து விமான டிக்கெட் கட்டணம் தொடங்குகிறது. இச்சலுகையினால் பலனடைய ஜனவரி 26ஆம் தேதிக்குள் டிக்கெட் புக் செய்துவிட வேண்டும்.
குறிப்பாக, இச்சலுகையின் கீழ் பிப்ரவரி 11 முதல் மார்ச் 31ஆம் தேதி வரையிலான காலத்துக்கும் விமான டிக்கெட்டுகளை புக் செய்ய முடியும். இச்சலுகை one-way பயணத்துக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகையை உள்நாட்டு பயணத்துக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். சர்வதேச விமான டிக்கெட்டுகளுக்கு கிடையாது.
முக்கிய அம்சமாக, இந்தச் சலுகையின் கீழ், Go First விமான நிறுவனத்தின் குடியரசு தினச் சலுகையின் கீழ் நீங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால், பயணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு வரை உங்கள் விமான டிக்கெட்டுகளை எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் மாற்றியமைக்கலாம்.
ஆனால் நீங்கள் டிக்கெட்டை ரத்து செய்ய விரும்பினால், ரத்துசெய்வதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil