உங்கள் வங்கி கணக்கில் உள்ள இருப்பை ஆதார் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம். இதற்கு இணைய வசதி தேவையில்லை. இதற்கு எளிமையான நான்கு வழிமுறைகள் உள்ளன.
முதலில் பதிவு செய்யப்பட்ட எண்ணில் இருந்து 9999*1# என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். பின்னர், வங்கிக் கணக்கை உங்கள் எண்ணுடன் இணைக்க 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும்.
உங்கள் ஆதார் எண்ணை மீண்டும் உள்ளிட்டு சரிபார்க்கவும். திரையில் வங்கி இருப்புடன் UIDAI இலிருந்து குறுஞ்செய்தி ஒன்றைப் பெறுவீர்கள்.
அதன் பின்னர் நீங்கள் வங்கியில் உள்ள உங்கள் கணக்கின் இருப்பு நிலை குறித்து அறிந்து கொள்ளலாம். தற்போதுஆதார் அட்டை ஒரு முக்கியமான கருவியாக உள்ளது. இது மொபைல் எண்ணுடன் இணைக்கப்படும்போது பல்வேறு சேவைகளை ஒன்றிணைக்க அனுமதிக்கிறது.
இது உங்கள் மொபைல் எண், வங்கி கணக்கு மற்றும் பான் கார்டுடன் இணைக்கப்படும்போது,, மேலும் பல அரசாங்க திட்டங்களைப் பெற வழிவகை செய்கிறது.
இந்த வசதி, ஒவ்வொரு முறையும் வங்கிக்குச் செல்வதில் சிரமப்படும் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வங்கி நிலுவைகளைச் சரிபார்க்க வங்கிக்குச் செல்ல வேண்டிய தேவையற்ற தடையை இது நீக்குகிறது. ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதவர்களுக்கும் இது பெரிதும் உதவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil