NPS என்பது பங்களிப்பு அடிப்படையிலான அமைப்பில் செயல்படும் ஓய்வூதியம் மற்றும் சேமிப்புத் திட்டமாகும். ஓய்வு பெற்ற பிறகு மக்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதே இதன் முக்கிய நோக்கம். NPS இன் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அது நீங்கள் செய்யும் முதலீடு மற்றும் அதில் கிடைக்கும் வருமானத்தின் அடிப்படையில் உங்கள் ஓய்வூதியத் தொகையை தீர்மானிக்கப்படுகிறது.
ஓய்வுக்கு பின்னர் உங்கள் செலவுகளை பராமரிக்க நிலையான வருமானம் அவசியமாகிறது.
இப்பதிவில், 25 வயதான ஒருவர், 60 வயதில் ஓய்வு பெற்ற பிறகு, 1 லட்ச ரூபாய் மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெற ஒவ்வொரு மாதமும் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
முதலீட்டு காலம்: 35 ஆண்டுகள் (வயது 25 முதல் 60 வரை)
மாதாந்திர ஓய்வூதிய இலக்கு : ரூ 1 லட்சம்
ஓய்வூதியமாக மாதத்திற்கு ரூ.1 லட்சம் என்ற இலக்கை அடைய, தனிநபர் 12% வருடாந்திர வருமானத்தை வைத்துக்கொண்டு, அடுத்த 35 ஆண்டுகளுக்கு மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ.7,750 முதலீடு செய்ய வேண்டும். NPS வரலாற்று ரீதியாக ஆண்டுதோறும் சுமார் 10% வருமானத்தை வழங்கியிருப்பதால், இந்த வருமான விகிதம் மிதமானது மற்றும் அடையக்கூடியதாக கருதப்படுகிறது.
35 ஆண்டுகளுக்குப் பிறகு, மொத்த முதலீடு சுமார் 5 கோடி ரூபாய் இருக்கும். இந்த முதலீடு, மாதத்திற்கு ரூ. 1 லட்சம் ஓய்வூதியத்தைப் பெற போதுமானதாக இருக்கும்.
இப்போது NPS முதலீடு எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வோம்:
NPS இன் கீழ், ஒருவர் முதிர்வுத் தொகையில் குறைந்தபட்சம் 40 சதவீதத்தை வருடாந்திர திட்டத்தில் கட்டாயமாக முதலீடு செய்ய வேண்டும். இருப்பினும், வருடாந்திர திட்டத்தை வாங்க 100% முதிர்வுத் தொகையை முதலீடு செய்ய ஒருவருக்கு சுதந்திரம் உள்ளது. ஆனால் 40 சதவீதத்தை ஆன்யூட்டியில் முதலீடு செய்தால், மீதமுள்ள 60 சதவீதத்தை மொத்தமாக திரும்பப் பெறுவது வரி விலக்காகும்.
NPS வரி நன்மைகள்:
NPS இல் முதலீடு செய்வதன் மூலம் வரிகளில் இருந்து சுமார் ரூ. 62,400 வரை சேமிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“