NPS invest just Rs74 a day and get Rs1 crore on retirement Tamil News : நீங்கள் சம்பாதித்துக்கொண்டிருக்கும்போதே ஓய்வூதியத் திட்டமிடல் என்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில், இது நீங்கள் ஓய்வு பெரும் வரை ஒரு பெரிய தொகையைச் சேமித்து வைக்க உங்களை அனுமதிக்கிறது. அந்த வகையில் தேசிய ஓய்வூதிய அமைப்பு ஒரு சிறந்த ஆப்ஷன். இதில் நீங்கள் மொத்தமாக முதலீடு செய்யலாம் மற்றும் உங்கள் ஓய்வுக்குப் பிறகு மாதாந்திர ஓய்வூதியத்தை ஏற்பாடு செய்யலாம்.
நீங்கள் ஒரு நாளைக்கு வெறும் 74 ரூபாயைச் சேமித்து, அதை NPS-ல் சேர்த்தால், ஓய்வு பெறும் போது உங்கள் கையில் ஒரு கோடி ரூபாய் இருக்கும். உங்களுக்கு 20 வயதாக இருந்தால், உங்கள் ஓய்வூதியத்திற்கான திட்டமிடலை இப்போதே தொடங்கலாம். பொதுவாக இந்த வயதில் யாரும் வேலை செய்ய மாட்டார்கள். இருந்தபோதும், ஒரு நாளைக்கு ரூ.74 சேமிப்பது பெரிய விஷயமல்ல.
NPS என்பது சந்தையுடன் இணைக்கப்பட்ட ஓய்வூதியம் சார்ந்த முதலீட்டு விருப்பம். இந்த திட்டத்தின் கீழ், NPS பணம் இரண்டு இடங்களில் முதலீடு செய்யப்படுகிறது. அவை, ஈக்விட்டி அதாவது பங்குச் சந்தை மற்றும் கடன் அதாவது அரசு பத்திரங்கள் மற்றும் கார்ப்பரேட் பத்திரங்கள். கணக்குத் திறக்கும் போது மட்டும் எவ்வளவு NPS பணம் ஈக்விட்டிக்குச் செல்லும் என்பதை நீங்கள் முடிவு செய்யலாம். வழக்கமாக, 75% வரை பணம் ஈக்விட்டிக்கு போகலாம். இதன் பொருள், நீங்கள் PPF அல்லது EPF-ஐ விட சற்று அதிக வருவாயைப் பெறுவீர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது நீங்கள் NPS மூலம் கோடீஸ்வரராக மாற விரும்பினால், அதன் வழிமுறை மிகவும் எளிதானது. ஒரு சிறிய ஸ்ட்ராடஜி மட்டுமே தேவை. இப்போது உங்களுக்கு 20 வயது என்று வைத்துக்கொள்வோம். NPS-ல் நீங்கள் நாள் ஒன்றுக்கு ரூ.72, அதாவது மாதத்திற்கு ரூ.2,230 சேமித்து முதலீடு செய்தால், நீங்கள் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெறும்போது, ஒரு கோடீஸ்வரராக இருப்பீர்கள். இப்போது உங்களுக்கு 9% விகிதத்தில் வருமானம் கிடைத்தது என்று வைத்துக்கொள்வோம். எனவே, நீங்கள் ஓய்வு பெறும்போது, உங்கள் மொத்த ஓய்வூதிய பணம், ரூ.1.03 கோடியாக இருக்கும்.
NPS-ல் முதலீடு செய்யத் தொடங்குங்கள்
வயது: 20 ஆண்டுகள்
மாத முதலீடு : ரூ.2230
முதலீட்டுக் காலம் : 40 ஆண்டுகள்
மதிப்பிடப்பட்ட வருமானம் : 9%
NPS முதலீடுகளின் பராமரிப்பு கணக்கு
மொத்த முதலீடு : ரூ.10.7 லட்சம்
பெறப்பட்ட மொத்த வட்டி : ரூ.92.40 லட்சம்
ஓய்வூதிய பணம் : ரூ 1.03 கோடி
மொத்த வரி சேமிப்பு : ரூ. 3.21 லட்சம்
குறிப்பிடத்தக்க வகையில், நீங்கள் இந்த பணத்தை ஒரே நேரத்தில் திரும்பப் பெற முடியாது. அதில் 60 சதவிகிதத்தை மட்டுமே நீங்கள் எடுக்க முடியும், மீதமுள்ள 40 சதவிகிதத்தை நீங்கள் வருடாந்திர திட்டத்தில் வைக்க வேண்டும். அதிலிருந்து ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் கிடைக்கும். உங்கள் பணத்தின் 40% வருடாந்திரத்தில் நீங்கள் வைத்துள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். எனவே உங்களுக்கு 60 வயதாகும்போது, நீங்கள் மொத்தமாக 61.86 லட்சம் மற்றும் வட்டி 8%என்று கருதினால், ஒவ்வொரு மாத ஓய்வூதியமும் சுமார் ரூ.27,500-ஆக இருக்கும்.
இது சந்தையுடன் இணைக்கப்பட்ட தயாரிப்பு என்பதால், வருமானம் மாறுபடலாம். எந்தவொரு முதலீட்டின் மந்திரமும் ஆரம்பத்தில் முதலீடு செய்யத் தொடங்குவதுதான் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil