இந்த குழு அறிக்கையை சமர்பிப்பதற்கான காலக்கெடு எதுவும் இல்லை. ஆனால், இந்த குழு நிதி தாக்கங்களை மனதில் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.
அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய முறையை மறுஆய்வு செய்வதற்கான குழுவை அமைக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் அறிவித்ததைத் தொடர்ந்து, நிதியமைச்சகம் நிதிச் செயலாளர் டி.வி.சோமநாதன் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழுவை வியாழக்கிழமை அமைத்தது. இருப்பினும், இந்த குழுவின் பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு எதையும் குறிப்பிடவில்லை.
இந்த குழுவின் விதிமுறைகளின்படி, தேசிய ஓய்வூதிய முறையின் (என்.பி.எஸ்) தற்போதைய கட்டமைப்பு மற்றும் கட்டமைப்பின் தற்போதைய நிலை அரசு ஊழியர்களுக்குப் பொருந்தும் வகையில், அதில் ஏதேனும் மாற்றங்கள் தேவையா என்று பரிந்துரைக்கும்.
என்.பி.எஸ்-ன் கீழ் உள்ள அரசு ஊழியர்களின் ஓய்வூதியப் பலன்களை மேம்படுத்தும் நோக்கில், நிதித் தாக்கங்கள் மற்றும் ஒட்டுமொத்த பட்ஜெட் மீதான தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, அதை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளையும் இந்த குழு பரிந்துரைக்கும் என்று மக்கள் செலவினத் துறையால் வெளியிடப்பட்ட அலுவலக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோமநாதன் தலைமையிலான இந்த குழுவில், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (டி.ஓ.பி.டி) செயலாளரும் இருப்பார்; சிறப்புச் செயலாளர், செலவினத் துறை; மற்றும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (பி.எஃப்.ஆர்.டி.ஏ) தலைவர் அதன் உறுப்பினர்களாவார்கள்.
கடந்த மாதம், லோக்சபாவில் நிதி மசோதா 2023 பரிசீலனையின் போது நியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய முறையை மேம்படுத்துவது குறித்து ஆராய ஒரு குழுவை அமைப்பதாக அறிவித்தார். இது எதிர்க்கட்சிகள் ஆளும் 5 மாநிலங்கள்பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஏற்றுக்கொண்ட பின்னணியில் வருகிறது.
இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் ஆகியவை வரையறுக்கப்பட்ட பலன்களை வழங்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு (ஓ.பி.எஸ்) திரும்பியதால், இத்தகைய குழுவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம், மகாராஷ்டிராவில் ஆளூம் பாஜக-சேனா (ஷிண்டே பிரிவு) அரசாங்கமும் என்.பி.எஸ்-ன் கீழ் உள்ளவர்களுக்கு பழைய ஓய்வூதிய முறையின் பணப் பலன்களை வழங்க கொள்கையளவில் ஒப்புதல் அளித்தது. மாநில அரசு புதிய திட்டத்தில் அதன் பங்கை 14 சதவீதத்திலிருந்து 20 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது, இத்திட்டத்தில் பணியாளர்களின் பங்களிப்பு 10 சதவீதமாக இருக்கும் நிலையில், அரசின் பங்களிப்பு 14 சதவீதமாக உள்ளது.
ஜனவரி 2004-க்குப் பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களை உள்ளடக்கிய என்.பி.எஸ்-ன் கீழ், பங்களிப்புகள் வரையறுக்கப்படுகின்றன. ஆனால், நன்மைகள் சந்தையைப் பொறுத்தது. ஜனவரி 1, 2004 க்குப் பிறகு பணியமர்த்தப்பட்ட அதன் ஊழியர்களைப் பொறுத்தவரை பழைய ஓய்வூதிய முறையை மீட்டெடுப்பதற்கான எந்தவொரு திட்டத்தையும் பரிசீலிக்கவில்லை என்று மார்ச் மாதம், மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. இருப்பினும், அரசு ஊழியர்களில் ஒரு பிரிவினருக்கு ஒரே நேரத்தில் பணி மாறுவதற்கு மத்திய அரசு அனுமதித்தது. 2003 டிசம்பரில் என்.பி.எஸ் அறிவிப்புக்கு முன்பே விளம்பரப்படுத்தப்பட்ட பழைய ஓய்வூதிய முறையில் உள்ளவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டன. பழைய ஓய்வூதிய முறையின் கீழ், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் கடைசியாகப் பெற்ற சம்பளத்தில் 50 சதவீதத்தை மாதாந்திர ஓய்வூதியமாகப் பெறுகிறார்கள்.
ஜனவரி 1, 2004 முதல், ஆயுதப்படைகளைத் தவிர்த்து, மத்திய அரசு என்.பி.எஸ்-ஐ அறிமுகப்படுத்தியது. உயர் ஓய்வூதிய கொடுப்பனவுகள் கருவூலத்தின் சுமையை அதிகரிக்கிறது. நிதி தாக்கங்களை ஏற்படுத்துகிறது, இது உச்ச நீதிமன்றத்தில் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் தொடர்பான சமீபத்திய விசாரணையில் அரசாங்கத்தால் சுட்டிக்காட்டப்பட்டது.
ஜனவரியில், ரிசர்வ் வங்கி பழைய ஓய்வூதிய முறைக்கு திரும்புவதற்கு எதிராக மாநிலங்களுக்கு எச்சரித்தது. இது மாநிலங்களின் நிதிச்சுமையை அதிகரிக்கும் என்று கூறியது. “இந்த நடவடிக்கையின் மூலம் நிதி ஆதாரங்களில் வருடாந்திர சேமிப்பு குறுகிய காலமாக இருக்கும். தற்போதைய செலவினங்களை ஒத்திவைப்பதன் மூலம், வரும் ஆண்டுகளில் மாநிலங்கள் நிதியில்லாத ஓய்வூதியப் பொறுப்புகள் குவியும் அபாயம் உள்ளது” என்று ரிசர்வ் வங்கி தனது ‘மாநில நிதி அறிக்கை’யில் கூறியிருந்தது.
பிப்ரவரியில், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், ஆந்திரப் பிரதேசத்தில் ஒய்.எஸ்.ஆர்.சி.பி. அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட பழைய ஓய்வூதிய முறை மற்றும் என்.பி.எஸ் ஆகியவற்றின் கூறுகளை இணைக்கும் மாதிரியை நிதி அமைச்சக அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக செய்தி வெளியிட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“