நீங்கள் சம்பாதிக்கும் காலத்தில் சேமிக்க விரும்பினால் மற்றும் ஓய்வு பெற்ற பின்னர் நிலையான ஓய்வூதியம் பெற விரும்பினால், தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) சிறந்த முதலீட்டுத் திட்டமாக இருக்கலாம். ஓய்வு காலத்தில் மாதம் ரூ. 50,000 அல்லது ரூ. 1 லட்சம் அல்லது வாழ்நாள் முழுவதும் அதிகத் தொகையைப் பெற, எவ்வளவு சேமிக்கத் தொடங்க வேண்டும் என்பதை NPS பென்ஷன் கால்குலேட்டரைப் பயன்படுத்துவதன் மூலம் இப்போது கணக்கிடலாம்.
நீங்கள் ஒரு NPS கணக்கைத் திறந்து, உங்கள் ஓய்வு பெறும் வயது வரை தொடர்ந்து சேமிக்கத் தொடங்க வேண்டும், இதில் பொதுவாக நீங்கள் 60 வயதைத் தொடும் போது, அதாவது முதிர்ச்சியின் போது (உங்களுக்கு 60 வயதாக இருக்கும் போது), நீங்கள் அதிகபட்சமாக 60 சதவீத கார்பஸை திரும்பப் பெறலாம், மீதமுள்ள 40 சதவீதத்தை, ஓய்வூதிய சேமிப்புக்கு வழங்க வேண்டும். இந்த மீதமுள்ள 40 சதவீதத்தை ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும், அங்கிருந்து நீங்கள் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் அல்லது வருடாந்திர அடிப்படையில் நிதியுதவி பெறுவீர்கள்.
ஆனால் நீங்கள் ஒரு NPS கணக்கைத் திறப்பதற்கு முன், மாதாந்திர ஓய்வூதியத் தொகையை சரியாகச் சேமிக்க திட்டமிட்டுள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் NPS கால்குலேட்டரைப் பயன்படுத்தி (NPS அறக்கட்டளை இணையதளத்தில்) பணி ஓய்வுக்குப் பிறகு விரும்பிய ஓய்வூதியத் தொகையைப் பெற ஒவ்வொரு மாதமும் நீங்கள் சேமிக்க வேண்டிய தொகையைக் கணக்கிடலாம்.
NPS பென்ஷன் கால்குலேட்டர் தற்காலிக ஓய்வூதியம் மற்றும் முதிர்ச்சியின் போது நீங்கள் எதிர்பார்க்கும் மொத்த தொகை பற்றிய தோராயமான யோசனையை உங்களுக்கு வழங்குகிறது. NPS ஓய்வூதியக் கால்குலேட்டரின் மிக முக்கியமான பகுதி என்பது 60 வயதில் நீங்கள் திரும்பப் பெற விரும்பும் ஓய்வூதிய தொகையின் அளவாகும். கார்பஸைத் திரும்பப் பெற வேண்டாம் என்று நீங்கள் தேர்வுசெய்து, மொத்தத் தொகையிலும் ஓய்வூதியத்தைப் பெற விரும்பினால், சிறிய தொகையைச் சேமித்து அதிக ஓய்வூதியத்தைப் பெறலாம்.
மாதாந்திர ஓய்வூதியத்தை கணக்கிடுவதற்கு NPS கால்குலேட்டரைப் பயன்படுத்தும் போது, கீழே உள்ள சில விஷயங்கள் உங்களுக்குத் தேவைப்படும்:
உங்கள் தற்போதைய வயது
உங்கள் ஓய்வூதிய வயது (NPS இல் இது தானாகவே காட்டப்படலாம்)
உங்களுடைய மாதாந்திர பங்களிப்பு
நீங்கள் எதிர்ப்பார்க்கும் வளர்ச்சி விகிதம் – 5 முதல் 15 சதவிகிதம் வரையிலான வருமானத்தை வைத்துக் கொள்ளுங்கள்
முதிர்ச்சியின் போது நீங்கள் திரும்பப் பெறும் சதவீதம் – மாறுபட்ட முடிவுகளைக் காண 40 சதவீதம் மற்றும் பூஜ்ஜிய சதவீதத்துடன் முயற்சிக்கவும்.
அனுமானிக்கப்பட்ட வருடாந்திர வீதம் – 6 சதவீத வருமானத்தை வைத்துக் கொள்ளுங்கள்
30 வயதுடைய ஒருவருக்கு (NPS முதிர்வு வயது 60), 10 சதவிகித வளர்ச்சி விகிதம், அனுமானிக்கப்பட்ட வருடாந்திர விகிதம் 6 சதவிகிதம் என ஒரு எடுத்துக்காட்டு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
60 வயதில் பூஜ்ஜிய சதவீதம் திரும்பப் பெறுதல்:
ஒரு லட்சம் ரூபாய் மாதாந்திர ஓய்வூதியம் பெற ஒவ்வொரு மாதமும் 9000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.
60 வயதில் 40 சதவீதம் திரும்பப் பெறுதல்:
ஒரு லட்சம் ரூபாய் மாதாந்திர ஓய்வூதியம் பெற ஒவ்வொரு மாதமும் 22000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.
எனவே, உங்கள் வயது, சேமிப்புத் தொகை, திரும்பப் பெறும் வட்டி விகிதம் மற்றும் திரும்பப் பெறும் அளவு ஆகியவற்றைப் பொறுத்து, நீங்கள் ரூ. 50,000 அல்லது ரூ. 1 லட்சம் அல்லது அதிகத் தொகையை வாழ்நாள் ஓய்வூதியமாக பெற திட்டமிடலாம். NPS இல் முதலீடு செய்வதன் மூலம் வரிச் சலுகைகளைத் தவிர NPS இலிருந்து இன்னும் பல சலுகைகளையும் பெறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil