நீண்ட கால முதலீட்டைத் தேர்ந்தெடுக்கும்போது, பெரும்பாலான மக்கள் மற்றவர்களை விட பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) மற்றும் தேசிய ஓய்வூதிய அமைப்பு (என்பிஎஸ்) ஆகியவற்றை விரும்புகிறார்கள். இருப்பினும், இந்த இரண்டு முதலீட்டு விருப்பங்களின் நோக்கங்களும் வேறுபட்டிருக்கலாம். NPS முற்றிலும் ஓய்வூதியத் திட்டம், PPF முதிர்வுக்குப் பிறகும் செயலில் இருக்க வேண்டும். இந்த இரண்டு திட்டங்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
NPS ஒரு ஓய்வூதியத் திட்டம் என்பதால், இதில் முதலீடு செய்வதால் 60 வயதிற்குப் பிறகும் ஓய்வூதியம் தொடர்ந்து கிடைக்கிறது. பிபிஎஃப் மூலம் ஓய்வூதியம் பெற, முதிர்வுக்குப் பிறகும் நீங்கள் அதை ஆக்டிவாக வைத்திருக்க வேண்டும். பிபிஎஃப்-பினை பொறுத்தவரையில் 100% தொகையினை பத்திரம் உள்ளிட்ட சந்தைகளில் முதலீடு செய்யலாம்
இதே என்பிஎஸ் திட்டத்தில் கடன் மற்றும் ஈக்விட்டி சந்தைகளில் முதலீடு செய்யலாம். குறிப்பாக ஈக்விட்டிகளில் 75% வரையில் முதலீடு செய்து கொள்ளலாம். இது ரிஸ்க் அதிகமானது என்றாலும் வருமானம் அதிகம். ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர் 50: 50 விகிதத்தில் முதலீட்டினை செய்யலாம். இதன் மூலம் நீண்டகால நோக்கில் 10% வரையில் வருமானம் பெறலாம்.
என்பிஎஸ் திட்டத்தில் குறைந்தபட்சம் வருடாந்திர தொகைக்காக 40% தொகையினை வைத்தாக வேண்டும். இதன் மூலம் உங்களது ஓய்வுகாலத்தில் உங்களால் பென்ஷனை பெற முடியும். இந்த 40% நிலுவையின் மூலமே உங்கள் ஓய்வு காலத்திற்கு பிறகு மாத ஓய்வூதியமாக பெற முடியும்.
மேற்கண்ட என்பிஎஸ், பிபிஎஃப் ஆகிய இரு சேமிப்பு திட்டங்களிலுமே வரிச்சலுகை உண்டு. இதன் மூலம் வருடத்திற்கு 1.5 லட்சம் ரூபாய் வரிச்சலுகை கிடைக்கும். என்பிஎஸ் திட்டத்தினை பொறுத்தவரையில் முதிர்வுகாலம் கிடையாது. ஆனால் பிபிஎஃப் திட்டம் 15 ஆண்டுகள் முதிர்வுகாலம் ஆகும்.
எனினும் பிபிஎஃப் திட்டத்தில் முதிர்வுக்கு பிறகு 5 ஆண்டு தொகுப்புகளாக மீண்டும் நீட்டித்துக் கொள்ள முடியும். நிபுணர்கள் இவ்வாறு நீட்டிக்க முடியும் என்றால் இந்த பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்யலாம் என கூறுகின்றனர். இதுவே மாதாமாதம் ஓய்வூதியம் வேண்டும் என்று நினைப்பவர்கள் என்பிஎஸ் திட்டத்தினை தேர்ந்தெடுக்கலாம்.
PPF மற்றும் NPS இரண்டில் எது உங்களுக்கு ஓய்வூதியத்தில் அதிக நன்மை அல்லது தொகையை அளிக்கிறது என்பதை இப்போது பார்ப்போம். உங்களுக்கு 30 வயதாகிறது என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் அடுத்த 30 வருடங்களுக்கு முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இதன் மூலம் 60 வயதிற்கு பிறகு உங்களது கையில் மிகப்பெரிய தொகையானது கிடைக்கும். இது ஓய்வு காலத்திற்கு பயன்படும்.
பிபிஎஃப் திட்டத்தில் மாதம் ரூ.3,000
வயது - 30 வருடம்
முதலீட்டு காலம் - 30 ஆண்டுகள்
மாத முதலீட்டு தொகை - ரூ.3000
வருட வருமானம் - 7.1%
மொத்த முதலீடு - ரூ.10.80 லட்சம்
முதிர்வு மதிப்பு - ரூ.37.08 லட்சம்
நீங்கள் மாதம் 3000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 36,000 ரூபாய், 30 வருடங்களுக்கு முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். தற்போதைய நிலவரப்படி வட்டி விகிதம் 7.1%. நீங்கள் 30 வருடங்கள் கழித்து 37,08,219 ரூபாய் பெறுவீர்கள்.
என்பிஎஸ் திட்டத்தில் மாதம் ரூ.3,000
வயது - 30 வருடம்
முதலீட்டு காலம் - 30 ஆண்டுகள்
மாத முதலீட்டு தொகை - ரூ.3000
வருட வருமானம் - 8.0%
மொத்த முதலீடு - ரூ.10.80 லட்சம்
முதிர்வு மதிப்பு - ரூ.44.52 லட்சம்
இந்த ஓய்வு திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்தால், கண்டிப்பாக 40% தொகையினை வருடாந்திர தொகையாக வைத்திருக்க வேண்டும். 17.81 லட்சம் ரூபாய் வருடாந்திர திட்டத்திலும், 26.71 லட்சம் ரூபாய் ஒரே தொகையாகவும் பெற முடியும். இதன் மூலம் மாதாமாதம் 11,874 ரூபாய் பென்ஷனாக பெற முடியும். வட்டி விகிதம் 8% வருமானம் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.