ஒவ்வொருவரும் பணி ஓய்வு காலத்தில் பாதுகாப்பான மாத வருமானம் வர வேண்டும் என ஆசைப்படுவார்கள். பென்ஷன் தொகைக்காக பல சேமிப்பு திட்டங்கள் இருந்தாலும், சிய ஓய்வூதிய அமைப்பு (NPS) சிறந்த முதலீட்டுத் திட்டமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்த திட்டத்தின் மூலம், உங்களுக்கு 60 வயதாகும்போது மாதம் 50 ஆயிரம் ரூபாய் பென்ஷன் தொகையாக கிடைத்துவிடும். இந்த திட்டம் குறித்து விரிவாக இச்செய்திதொகுப்பில் காணலாம்.
ஓய்வு பெற்ற பின்னர் நிலையான ஓய்வூதியம் பெறுவதற்கான திட்டங்களில் தேசிய ஓய்வூதிய அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. அரசாங்கத்தின் இந்த திட்டம்,10 சதவீதத்திற்கும் அதிகமான வருமானத்தை அளிக்கிறது. குறைந்த ரிஸ்க் கொண்ட பெரிய வருமானத்தை தரும் திட்டங்களில் இதுவும் ஒன்று.
முன்னதாக, இந்த திட்டம் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே என கூறப்பட்டது. பின்னர், அனைவரும் அப்ளை செய்யலாம் என விதி திருத்தப்பட்டது.எந்தவொரு இந்திய குடிமகனும் முதலீடு செய்யலாம். முக்கியம்சம் என்னவென்றால், இதில் வரிவிலக்கு கிடைக்கிறது.
என்பிஎஸ் திட்டத்தில், நீங்கள் மாதந்தோறும் முதலீடு செய்ய வேண்டும். செலுத்த விரும்பும் தொகையை குறிப்பிட்டால் போதும், மாதந்தோறும் உங்கள் வங்கிக்கணக்கில் இருந்து அந்த பணம் தானாகவே கழிக்கப்படும்.
உதாரணமாக, உங்கள் வயது 35 என்றால், 60 வயதில் ஓய்வுபெறும் போது மாதம் பென்ஷன் தொகை 50 ஆயிரம் பெற விரும்பினால், அதற்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். 60 வயதாகும் வரை, தொடர்ந்து நீங்கள் முதலீடு செய்ய வேண்டும். சரியாக 25 ஆண்டுகள் நிறைவடைந்த போது, நீங்கள் முதலீடு செய்த தொகை 40 லட்சம் தான். ஆனால், முதிர்வு கால தொகை வட்டியுடன் ரூ.2 கோடி ஆகும். இதில், 50 விழுக்காடு பணம் நேரடியாக வங்கிக்கு செலுத்தப்படும். மீதமுள்ள 1 கோடி ரூபாய், பென்ஷனாக மாதந்தோறும் 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.
இந்த திட்டத்தின் வட்டி தொகை 6 விழுக்காடு ஆகும். ஒருவேளை சம்பந்தப்பட்ட நபர் மரணமடையும் பட்சத்தில், அந்த தொகை அவரது நாமினியின் கணக்கிற்கு மொத்தமாக அனுப்பப்படும். கொரோனா அச்சுறுத்தலால், பெரும்பாலானோர் பாதுகாப்பான வங்கி சேமிப்பு திட்டங்களை தேடி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil