New Update
NSC vs tax-saving FD
Advertisment
National Savings Certificates
NSC vs tax-saving FD : சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஸ்கீம் தான் தேசிய சேமிப்பு பத்திரம் (National Savings Certificates) . வருமான வரிச்சட்டம் 80சியின் கீழ் இதற்கு வரி விலக்கு உண்டு. இதனை வைத்து கடனும் வாங்கலாம்.
- அரசாங்க ஊழியர்கள், தொழில் அதிபர்கள், மற்றும் பல்வேறு துறைகளில் வேலை பார்ப்பவர்கள் மற்றும் இதர வருமான வரி செலுத்துவதற்காக இந்ததிட்டம் உருவாக்கப்பட்டது.
- இந்த பத்திரத்தின் காலம் ஐந்து ஆண்டுகளாகும்.
- வருமான வரிச்சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வருடத்திற்கு ரூ.1,00,000 வரை வரி விலக்கு பெறலாம்.
- வட்டி விகிதம் 8%மாக உள்ளது
- இதற்கு டி.டி.எஸ் பிடித்தம் கிடையாது
- இந்த பத்திரம் அரசாங்கத்தால் வழங்கப்படுவதால் மிகவும் பாதுகாப்பானதாகும். ஒவ்வொரு நிதி ஆண்டிலும் ஏப்ரல் 1ம் தேதிக்கு முன்பாக வட்டி விகிதத்தை அரசு அறிவிக்கும்.
- தபால் அலுவலகத்தில் இருந்து வழங்கப்படுவதால் ஒரு தபால் நிலையத்தில் இருந்து மற்றொன்றிற்கு மாற்றம் செய்து கொள்ள இயலும். சிதைந்து போனாலோ அல்லது திருடப்பட்டாலோ டூப்ளிகேட் வழங்கப்படும்.
- தேசிய சேமிப்பு பத்திரம் வாயிலாக கிடைக்கும் வட்டிக்கு நாம் வரி செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்சட் டெபாசிட் (Fixed Deposit)
- தற்போதைய வருமான வரிச் சட்டத்தின் படி 80சி வருமான வரி சட்டப்பிரிவின் கீழ் வைப்பு நிதிகளில் முதலீடு செய்தால், வரி சேமிப்பு செய்யலாம்.
- தனிநபர் மற்றும் கூட்டுக் குடும்ப உறுப்பினர்கள் இந்த வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
- வங்கிகளைப் பொறுத்து வைப்பு நிதிகளின் குறைந்த பட்ச வரம்பும், வட்டி விகிதமும் வேறுபடும்.
- இந்த வைப்பு நிதிகளுக்கான லாக் - இன் ப்ரீயட் 5 வருடம் ஆகும். இந்த முதிர்வு காலத்திற்கு முன்பு டெபாசிட் பணத்தை திரும்பப் பெறவோ, கடன் பெறவோ இயலாது.
- இதில் இருந்து பெறப்படும் வட்டி, முதலீடு செய்பவர்களின் வரி அடைப்புக்குறிக்குள் வருவதால், டி.டி.எஸ் செலுத்த வேண்டும்.
- எஸ்.பி.ஐ வங்கி வரி சேமிப்பு வைப்பு நிதிகளுக்கு 6.85% வட்டி அளிக்கிறது.
- தனியார் வங்கிகளான ஐ.டி.எஃப்.சி போன்ற வங்கிகள் 8.25% வரை வட்டிகளை வழங்குகிறது.
- மற்ற கணக்கர்களோடு ஒப்பிடுகையில் மூத்த குடிமக்களுக்கு அதிக அளவு வட்டியினை வழங்குகிறது வங்கிகள்.
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.