தேசிய பங்குச்சந்தையில் (நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் NSE) திங்களன்று தனிப்பட்ட பதிவு செய்யப்பட்ட முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 5 கோடி (தனித்துவமான பான் எண்கள்) அளவைத் தாண்டியுள்ளது. இதில் மஹாராஷ்டிரா முதலீட்டாளர்களில் 17 சதவீதத்தைக் கொண்டுள்ளது.
மூன்று கோடி பதிவு செய்யப்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து நான்கு கோடி பதிவு செய்யப்பட்ட முதலீட்டாளர்களுக்கான பயணம் சுமார் 15 மாதங்கள் எடுத்தாலும், அடுத்த ஒரு கோடி முதலீட்டாளர் பதிவுகள் ஏழு மாதங்களுக்கும் குறைவாகவே எடுத்ததாக NSE தெரிவித்துள்ளது. "NSE இல் பதிவு செய்யப்பட்ட கிளையன்ட் குறியீடுகளின் மொத்த எண்ணிக்கை 8.86 கோடியாக உள்ளது (வாடிக்கையாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வர்த்தக உறுப்பினர்களுடன் பதிவு செய்யலாம்)" என்று NSE கூறியது.
மாநில அளவில், மகாராஷ்டிராவில் 17 சதவீதமும், உத்தரப் பிரதேசத்தில் 10 சதவீதமும், குஜராத்தில் ஏழு சதவீதமும் புதிய முதலீட்டாளர்கள் பதிவு செய்துள்ளதாக NSE தெரிவித்துள்ளது. புதிய முதலீட்டாளர் பதிவுகளில் முதல் 10 மாநிலங்கள் 71 சதவீதத்தை பெற்றுள்ளன.
NSE படி, முதலீட்டாளர் பதிவுகளின் வளர்ச்சி பெரும்பாலும் மெட்ரோ அல்லாத நகரங்களில் இருந்து இயக்கப்படுகிறது. முதல் 50 நகரங்களுக்கு பின்னால் உள்ள நகரங்கள் 57 சதவீத புதிய முதலீட்டாளர் பதிவுகளை பெற்றுள்ளன, அதே சமயம் முதல் 100 நகரங்களுக்கு பின்னால் உள்ள நகரங்கள் 43 சதவீத பங்களிப்பை அளித்துள்ளன. இது பங்குச் சந்தைகளில் பெருகிவரும் ஆர்வம் பெருநகரங்கள் மற்றும் ஒரு சில முதல் அடுக்கு நகரங்களில் மட்டுமல்லாமல் பரவலாக உள்ளது என்பதைக் குறிக்கிறது என NSE கூறியது. இந்தியாவில் இரண்டு டெபாசிட்டரிகளுடன் சேர்த்து வைத்திருக்கும் மொத்த டீமேட் கணக்குகள் சுமார் 7.02 கோடியாக உள்ளன, இதில் ஒரு தனி முதலீட்டாளரிடம் உள்ள பல டிமேட் கணக்குகளும் அடங்கும் என்று NSE தெரிவித்துள்ளது. ஒரு முதலீட்டாளர் ஒன்றுக்கு மேற்பட்ட டீமேட் கணக்குகள் மற்றும் வர்த்தகக் கணக்குகளை வெவ்வேறு டெபாசிட்டரி பங்கேற்பாளர்கள் மற்றும் வர்த்தக உறுப்பினர்களுடன் ஒரே பான் எண்ணுடன் இணைக்க முடியும் என்று NSE கூறியது.
"இன்று எட்டப்பட்ட மைல்கல், அரசாங்கம், ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் அனைத்து பங்குதாரர்களின் முயற்சிகளின் உச்சம் ... மேலும் எண்ணிக்கையை அதிகரிப்பதையும், 10 கோடி தனித்துவமான முதலீட்டாளர்களின் அடையாளத்தை தொடுவதையும் நாங்கள் அடுத்த 3-4 ஆண்டுகளில் அடைய வேண்டும்.." என்று விக்ரம் லிமாயே, MD & CEO, NSE, கூறினார்,
4 கோடி தனித்துவ முதலீட்டாளர்களில் இருந்து 5 கோடி தனித்துவ முதலீட்டாளர்களுக்கான பயணம் சுமார் 203 நாட்கள் ஆனது, வட இந்திய மாநிலங்கள் 36 சதவீத புதிய முதலீட்டாளர் பதிவுகளுக்கு பங்களித்ததாக NSE கூறியது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.