என்டிபிசி க்ரீன் எனர்ஜி நிறுவனம் சார்பாக அதன் முதல் ஆரம்ப பொதுப் பங்கு (IPO) விற்பனை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதன் விலை ஒரு பங்கிற்கு ரூ. 102-108 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: NTPC Green’s Rs 10,000 crore IPO opens today
ரூ.59.31 கோடி பங்குகளில், 8.62 கோடி பங்குகள் சில்லறை முதலீட்டாளர்களுக்கும், மீதமுள்ளவை ஊழியர்கள் மற்றும் அதிக நிகர மதிப்புள்ள முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கப்படுகிறது.
திங்களன்று ஒரு பங்குக்கு ரூ.108 என்ற கணக்கில் முதலீட்டாளர்களுக்கு ரூ.3,960 கோடி மதிப்புள்ள பங்குகளை நிறுவனம் ஒதுக்கியது. இதில் ஆங்கர் பிரிவில் ஒதுக்கீடு பெற்றவர்களில் கோல்ட்மேன் சாக்ஸ், சிங்கப்பூர் அரசு, சிங்கப்பூரின் நாணய ஆணையம், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் மற்றும் ஐசிஐசிஐ புருடென்ஷியல் ஆகியோரும் அடங்குவர்.
என்டிபிசி க்ரீன் எனர்ஜியின் ஆரம்ப பொதுப் பங்கு முழுவதுமாக ஈக்விட்டி பங்குகளின் புதிய வெளியீடாக இருக்கும்; மேலும் தற்போதுள்ள பங்குதாரர்களால் விற்பனைக்கான சலுகை (OFS) இருக்காது. அதன்படி, முழு ஆரம்ப பொதுப் பங்கு வருமானமும் நிறுவனத்திற்குச் செல்லும் எனக் கூறப்படுகிறது. ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் ரூ.27,870 கோடி வெளியீட்டையும், ஸ்விக்கியின் ரூ.11,300 கோடி ஆரம்ப பொதுப் பங்கையும் தொடர்ந்து, இந்த ஆண்டின் மூன்றாவது பெரிய ஆரம்ப பொதுப் பங்காக இது இருக்கும்.
என்.டி.பி.சி தாய் நிறுவன பங்கின் விலை, தற்போது பரிவர்த்தனைகளில் ரூ.374.60 என குறிப்பிடப்பட்டுள்ளது.
என்.டி.பி.சி கிரீனின் 3,071 MW சூரிய மின் திட்டங்கள் மற்றும் 100 MW ஆற்றல் கொண்ட காற்றாலை திட்டங்கள் ஆகஸ்ட் 2024 நிலவரப்படி ஆறு மாநிலங்களில் உள்ளது. மேலும், பயன்பாட்டு அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கான திட்டங்களை உருவாக்குவதில் தாங்கள் கவனம் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆரம்ப பொதுப் பங்குகளின் நிகர வருவாயை பல்வேறு புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களுக்கு செலவளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நிகர வருவாயின் ஒரு பகுதியை ரூ.7,500 கோடியாக ஈக்விட்டி அல்லது கடனாகவோ அல்லது இரண்டின் கலவையாகவோ செலுத்துவதற்கும் மற்ற நிதிநிறுவனங்களில் இருந்து பெற்ற கடன்களை திருப்பி செலுத்துவதற்கும் செலவளிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜூலை 31, 2024 நிலவரப்படி, நிறுவனம் ஒருங்கிணைந்த அடிப்படையில் ரூ.16,235 கோடி கடன்களை நிலுவையில் வைத்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.