கோவையில் கல்லூரி மாணவர்களிடைய வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் விதமாகவும், மாணவர்களின் தொழில் நுட்ப திறன்களை வெளிக்கொண்டு வரும் விதமாக நியுஸ்டார்ட்ஸ் (Nustartz) என்ற நிறுவனம் பீளமேடு பகுதியில் தனது மையத்தை துவங்கி உள்ளது.
தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் தென்னிந்தியாவில் பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களுக்கு அடுத்தபடியாக கோவை மிக வேகமாக வளரும் நகரமாக மாறி வருகிறது. உலக அளவில் பெரிய நிறுவனங்கள் கோவையில் தனது நிறுவனங்களை கட்டமைத்து வரும் நிலையில், தொழில் நுட்ப நிறுவனங்களில் முன்னனி நிறுவனமான நியுஸ்டார்ட்ஸ் (Nustartz) நிறுவனம் கோவையில் ஆஃபிஸ்பேயர் நிறுவனத்துடன் இணைந்து புதிய மையத்தை கோவை பீளமேடு பகுதியில் துவக்கி உள்ளது.
புதிய மையத்தின் துவக்க விழாவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை சேர்ந்த பென் ஜான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய மையத்தை திறந்து வைத்தார். இது குறித்து , நியுஸ்டார்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் பாக்தர் கூறுகையில், தொழில் நுட்ப வாய்ப்புகளில் தகுதி வாய்ந்த திறமையான மாணவர்கள் இந்த மையத்தை பயன்படுத்தி கொள்ளலாம். அது மட்டுமின்றி கல்லூரி மாணவர்களின் ஸ்டார்ட் அப் திறன்களை ஊக்குவிக்க எல்லா வசதிகளும் இங்கு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
குறிப்பாக கல்லூரகளுக்கே சென்று தகுதியான மாணவர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்க உள்ளதாகவும் அதே நேரத்தில் பகுதி நேர வேலையாக இந்த மையத்திலும் பணி புரியலாம் என குறிப்பிட்ட அவர்
அதற்கு கணிசமான சம்பளமும் வழங்க உள்ளதாக குறிப்பிட்டார். புதிய மையத்தின் துவக்க விழாவில் நியுஸ்டார்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் சிவா பெரியசாமி, விபி. மைக்ரோசாப்ட் சி.டி.ஓ எக்ஸ்ன்ட்ர் பென் ஜான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“