/indian-express-tamil/media/media_files/2025/09/27/new-h-1b-2025-09-27-11-05-21.jpg)
H-1B வேண்டாம்; அமெரிக்கா செல்ல O-1 போதும்; ட்ரம்புக்கு டஃப் கொடுக்கும் நெட்டிசன்கள் கண்டுபிடிப்பு
ஹெச்-1பி விசாவிற்கான விண்ணப்பக் கட்டணம் 100,000 டாலர் ஆக உயர்த்தப்பட்டிருப்பது, புதிய விண்ணப்பதாரர்கள், ஏற்கெனவே விசா வைத்திருப்பவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வேலை செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் ஹெச்-1பி விசா, அதன் லாட்டரி முறை மிகவும் போட்டி நிறைந்ததாகவும், விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் சிக்கலைச் சந்தித்து வந்தது.
ஒ-1 விசா என்றால் என்ன?
ஒ-1 விசா என்பது அறிவியல், கலை, கல்வி, வணிகம், விளையாட்டு அல்லது பொழுதுபோக்கு போன்ற துறைகளில் அசாதாரண திறமை அல்லது திறன் கொண்டவர்களுக்கானது. இது அவர்களை தற்காலிகமாக அமெரிக்காவில், தங்கள் நிபுணத்துவத் துறையில் பணியாற்ற அனுமதிக்கிறது. இந்த விசா பொதுவாக 3 ஆண்டுகள் வரை வழங்கப்படுகிறது, அதன்பின்னர் ஆண்டுதோறும் நீட்டிப்பு பெறுவதற்கான வாய்ப்பும் உண்டு. இது நேரடியாக நிரந்தர குடியுரிமைக்கு (Green Card) வழிவகுக்கவில்லை என்றாலும், தகுதிகள் இருப்பின், விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் இருந்தபடியே கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும். ஒ-1 விசா வைத்திருப்பவர்களின் சில உதவியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களும் அதனுடன் தொடர்புடைய பிற விசா பிரிவுகளின் கீழ் அமெரிக்காவில் அவர்களுடன் சேர முடியும்.
சமீபத்திய சமூக ஊடகப்பதிவு ஒன்று, அமெரிக்காவில் திறமையான தொழிலாளர்களுக்கான விசாக்களின் எதிர்காலம், குறிப்பாக ஒ-1 விசா மாற்று வழியாக உருவாவது குறித்து விவாதங்களைத் தூண்டியுள்ளது. அந்தப் பதிவு ஹெச்-1பி எதிர்கொள்ளும் சிக்கல்களைச் சுட்டிக்காட்டி, ஒ-1 விசா இப்போது பிரபலமடைந்து வருவதைக் கூறுகிறது. எனினும், பலர் ஒ-1 விசாவும் ஹெச்-1பி எதிர்கொண்ட அதே சிக்கல்களையே சந்திக்க நேரிடும் என்று கவலை தெரிவிக்கின்றனர். அதாவது, அதிகப்படியான விண்ணப்பங்களால், ஒ-1 விசா பெறுவது கடினமாவதோடு, அதிலும் ஒரு லாட்டரி முறை வரக்கூடும் என்று அஞ்சுகின்றனர்.
ஒரு பயனர், "அனைவரும் அசாதாரணமானவர்களாக (extraordinary) இருக்கும்போது, யாரும் அவ்வாறு இருப்பதில்லை" என்று கருத்து தெரிவித்து உள்ளார். இது, அதிகப்படியானோர் "அசாதாரணமானவர்கள்" என்று முத்திரை குத்தப்பட்டால், விசா அதன் தனிச்சிறப்பை இழக்கும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது. மேலும், சட்டப்பூர்வ மற்றும் சட்டவிரோதக் குடியேற்றம் இரண்டையும் கையாள்வதில் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் "தகுதியற்றது" என்றும் அந்தப் பதிவு விமர்சித்துள்ளது.
இந்த பதிவுக்கு பல நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஒரு பயனர், "நீங்க அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகளை ஒ-1 விசாக்களைக் குக்கீக்களைப் போல வழங்குவது போலப் பேசுகிறீர்கள்" என்று கிண்டலாகக் கூறியுள்ளார்.
மற்றொருவர், "சட்டப்பூர்வமானவர்களுக்கு, நீங்க உண்மையில் திறமைசாலி என்று வைத்துக்கொண்டால், உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் கிரீன் கார்டு கொடுக்கிறோம். அந்த ஆள் யார் என்பதை நாங்கள் 5 நிமிடங்களில் தெரிந்து கொள்ள வேண்டும். வெர்னர் வான் பிரவுன் (Werner von Braun), நாட்டிற்கு இன்றியமையாதவர் போன்றோர்." என்று குறிப்பிட்டு, ஒ-1 விசா எளிதில் வழங்கப்படுவதில்லை என்பதைச் சுட்டிக் காட்டினார்.
ஒரு பயனர், "$100k விதி இந்தியர்கள் கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து சட்டவிரோதமாக நுழைவதற்கான சந்தையை உருவாக்கும்" என்று கருத்துத் தெரிவித்துள்ளார். "இந்தக் கேடுகெட்ட விசாக்களை முடிவுக்குக் கொண்டு வந்து, தற்போதைய கிரீன் கார்டு நிலுவைகளைத் தீர்த்து, எல்லா ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களுக்கும் கிரீன் கார்டுகளை வழங்கி, இந்தத் திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரலாம்" என்று ஒரு பயனர் ஆவேசமாகக் கூறியுள்ளார்.
இன்னொருவர், "எல்-1 விசா மிக தவறாகப் பயன்படுத்தப்படும் விசாக்களில் ஒன்று. அமேசான் போன்ற நிறுவனங்கள் உலகம் முழுவதிலுமிருந்து ஒப்பீட்டளவில் குறைந்த செலவில் தொழிலாளர்களைப் பெற இதைப் பயன்படுத்துகின்றன. இதில் அதிகபட்ச எண்ணிக்கை வரம்பு (cap) இல்லை என்பதால் இது முதலாளிகளுக்கு ஹெச்1-பியை விட சிறந்தது. மேலும், எல்-1ல் உள்ள ஊழியர்கள் முதலாளியை மாற்ற முடியாது" என்று குறிப்பிட்டு, மற்றொரு விசா முறையின் துஷ்பிரயோகத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.