பொருட்களை டெலிவரி செய்யும் Gig தொழிலாளர்களை இலக்காகக் கொண்டு ரூ.39,999 அறிமுக விலையில் GIG வகை ஸ்கூட்டர்களை ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும், ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் S1 Z மாடல் ஸ்கூட்டரையும் அறிமுகப்படுத்தியுள்ளது. நகர்ப்புற பயணிகளை இலக்காகக் கொண்டு ரூ.59,999 விலையில் தனிநபர் பயன்பாட்டுக்கான இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.
'Gig' மற்றும் 'Gig+' இரண்டு வகை ஸ்ட்கூட்டர்களின் மூலம் குறுகிய மற்றும் நீண்ட பயணங்களில் ஈடுபடும் பொருட்களை டெலிவரி செய்யும் தொழிலாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த வகை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் அறிமுக விலை முறையே ரூ.39,999 மற்றும் ரூ.49,999 (எக்ஸ்-ஷோரூம்) என்று ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த ஸ்கூட்டர்கள் ஒருமுறை சார்ஜ் செய்தால் 112 கி.மீ தூரம் செல்லலாம், மேலும், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் 25 கி.மீ வேகத்தில் செல்லும். இது கழற்றி பொருத்தக்கூடிய 1.5 kWh பேட்டரி, ஒரு ஹப் மோட்டார் உடன் வருகிறது.
அதே போல, 'Gig+' எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பொருட்களை டெலிவரி செய்யும் தொழிலாளர்கள் அதிக எடையுடன் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்பதால் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு 45 கிமீ வேகத்தில் ஒரு முறை சார்ச் செய்தால் 81 கி.மீ வரை செல்லும். 1.5 kWh என்று கழற்றி பொருத்தக்கூடிய அளவில் ஒற்றை/இரட்டை பேட்டரியுடன் வருகிறது என்று ஒலா எலக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதே போல, S1 Z மற்றும் S1 Z+ என இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. S1 Z ஸ்கூட்டரின் விலை ரூ. 59,9999 என்றும் S1 Z+ ஸ்கூட்டரின் விலை ரூ.64,999 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் நவம்பர் 26 முதல் GIG மற்றும் S1 Z சீரிஸ் ஸ்கூட்டரை ரூ.499 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“